அவர்களால் தான் போரை முடிவுக்குக் கொண்டுவர முடிந்தது! கோத்தபாய விளக்கம்!

0

நாட்டில் நீடித்திருந்த 30 ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அரசாங்க ஊழியர்கள் பெரும் பங்காற்றினர் என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

நாட்டில் நீடித்திருந்த 30 ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அரச ஊழியர்கள் பெரும் பங்காற்றியிருந்தனர்.

இலங்கையைப் பொறுத்தமட்டில், அரச சேவை என்பது மிக முக்கியமான துறைகளில் ஒன்று. அச் சேவையில் ஏற்படும் விளைவுகள் ஆட்சியை பாதிக்கக்கூடும், அதனால்தான் இத்துறை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது.

அரசாங்க சேவையில் உள்ளவர்களுக்கு திறமை அவசியமானதாக இருக்கின்றது. யுத்தத்தை முடிப்பதற்பு அரசசேவையில் இருந்தவர்களின் செயற்பாடு மிகவும் உறுதியானதாக இருந்தது.

எனவே புதிய சட்டங்கள் அரசாங்க ஊழியர்களைப் பாதுகாப்பதாக இயற்றப்பட வேண்டும். அவ்வாறு இயற்றப்படும் போது அவர்கள் பயம் இல்லாமல் தமது சேவைகளை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகடனை விட அதிக தொகைக்கு விற்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகம்!
Next articleகொழும்பு உட்பட பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!