முகத்திலுள்ள அழுக்குகளை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற வேண்டுமா..?

0

முகத்தின் சருமத்தில் ஏற்படும் முகப்பருக்கள், சரும சுருக்கம், பொலிவிழந்த முகம் போன்ற பிரச்சனைகளை தடுக்க அற்புதமான வழிகள் இதோ

வெங்காயம் தேன் மாஸ்க்
1 வெங்காயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, அதனுடன் சிறிது தேன் மற்றும் 1 டீஸ்பூன் முல்தானி மட்டி பொடியை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து, கழுவ வேண்டும்.

பூண்டு முட்டை மாஸ்க்
1 டீஸ்பூன் வெண்ணிற களிமண், 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் கேரட் ஜூஸ் மற்றும் பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

ப்ளம்ஸ் மாஸ்க்
ப்ளம்ஸ் பழத்தை அரைத்து, அதனுடன் 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, அதை முகத்தில் தடவி, நன்கு உலர்ந்த பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.

பாதாம் தேன் மாஸ்க்
2 டீஸ்பூன் பாதாம் பொடியுடன், 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1/2 டீஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் தடவி உலர்ந்த பின் ரோஸ் வாட்டர் பயன்படுத்தி முகத்தைக் கழுவ வேண்டும்.

ஆப்பிள் மாஸ்க்
1/2 ஆப்பிளை அரைத்து, அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் தேன், 1 முட்டையின் மஞ்சள் கரு, 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி உலர்ந்த பின், குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஎந்த வகையான தலை வலியாக இருந்தாலும் இப்படி செய்யுங்கள் உடனே வலி பறந்துவிடும்!
Next articleதம்பதிகள் கர்ப்ப காலத்தில் சேர்ந்திருப்பது சரியானதா ! அதனால் ஏற்படும் மாற்றம் என்ன?