அழகு மகளை துடிதுடிக்க கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை! அதிர்ச்சிக் காரணம்!

0

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் Kothapalem கிராமத்தை சேர்ந்த கோட்டா வெங்கட் ரெட்டி என்பவருடைய மகள் வைஷ்ணவி (20).

தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வரும் வைஷ்ணவி, சக கல்லூரி மாணவர் ஒருவரை சில வருடங்களாகவே காதலித்து வந்துள்ளார்.

இதனை அறிந்துகொண்ட வெங்கட், பலமுறை மகளை கண்டித்து பார்த்துள்ளார். ஆனால் அதனை பொருட்படுத்தாத வைஷ்ணவி, தந்தையின் வார்த்தையை காதில் வாங்காமல் எதிர்த்து பேசி வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று கல்லுரியிலிருந்து வேகமாகவே வைஷ்ணவி உடல்நிலை சரியில்லை எனக்கூறிவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

வீட்டிற்கு வந்த உடனே, தந்தைக்கும்-மகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உங்களின் அனுமதி இல்லாமலே காதலனை திருமணம் செய்துகொள்வேன் என வைஷ்ணவி கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த வெங்கட், திடீரென மகளின் கழுத்தை பிடித்து நெரித்து கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் வைஷ்ணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வெங்கட்டை கைது செய்துள்ள பொலிஸார் ஆணவக்கொலையா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Previous articleயாழில் எரிகாயங்களுடன் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு!
Next article4 மாத குழந்தையின் அவலநிலையைப் பாருங்க! சம்பவத்திற்கு பின்பு நடந்த திருப்பம்!