அழகில் ஜொலிக்கணுமா தேனுடன் இலவங்கப் பொடியை சேர்த்து சாப்பிடுங்க!

0

அழகில் ஜொலிக்கணுமா தேனுடன் இலவங்கப் பொடியை சேர்த்து சாப்பிடுங்க!

ஆயுர்வேதத்தின் முக்கிய மருந்துகளாக இருப்பது தேன் மற்றும் இலவங்கப்பட்டை தான். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன, அவை நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி நம் மனதையும் அமைதிப்படுத்த இது பயன்படும்.

தேனில் குளுக்கோஸ், ஃப்ருக்டோஸ் மற்றும் மினரல்ஸ் இருக்கிறது. அத்துடன் இரும்புச்சத்து, கால்சியம், போஸ்பேட், க்ளோரின், பொட்டாசியம், மக்னீசியம், விட்டமின், பி1, பி2, பி3, பி5 மற்றும் பி6 இருக்கிறது. இது மிகச்சிறந்த ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் ஆகும்.

அதே போல இலவங்கப்பட்டையிலும் ஆண்ட்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கிறது. இதில் விட்டமின் ஏ, இ,டி,கே ஆகியவை இருக்கிறது.

இவற்றை ஒன்றாக சேர்த்து சாப்பிடும் போது உடலுக்கு நல்ல பயன்களை அள்ளித்தருகின்றது.

தேனுடன் இலவங்கப் படடை
தேன் மற்றும் இலவங்கப்பட்டை பொடியையை குழைத்து சாப்பிடுவதால் சளி, இருமல் போன்ற பருவகால தொற்றுகளை போக்க உதவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. அதோடு சிறுநீரக ஆரோக்கியம், சரும ஆரோக்கியம் என பலவகைகளில் நன்மை சேர்க்கின்றன.

தேன், இலவங்கப்பட்டை இரண்டும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் பண்புகளைக் கொண்டுள்ளன. அதோடு ஆக்ஸிஜனேற்ற பண்புகளும் உள்ளன. அதோடு செரிமானத்தையும் தூண்டும் ஆற்றல் கொண்டவை. எனவே வயிறு தொடர்பான பிரச்னைகளையும் போக்க உதவும். எனவே இலவங்கப்பட்டையை கொதிக்க வைத்தோ அல்லது பொடியை தேனுடன் குழைத்தோ சாப்பிடலாம்.

மூட்டு வலி, கீல்வாதம் ஆகிய பிரச்னைகளுக்கு இலவங்கப்பொடி மற்றும் தேனை வெதுவெதுப்பான நீரில் குழைத்து வலி நிறைந்த இடத்தில் தடவுங்கள். அந்த இடத்தில் வலி நீங்கலாம் அல்லது சூடான நீரில் 2 :1 என்ற விகிதத்தில் தேன் மற்றும் இலவங்கப்பட்டையை தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.

ஈறுகளின் ஆரோக்கியம், தொற்று பாதிப்புகள், பாக்டீரியாக்களை அழிப்பது இப்படி பல வழிகளில் வாய் சுகாதாரத்தை பேணுகிறது. இலவங்கப்பட்டை பொடியை தேனுடன் குழைத்து பல் தேய்ப்பதுபோல் தேய்த்து வந்தால் வாய் துர்நாற்றம் முதல் பாக்டீரியா தொற்று வரை சரி செய்யலாம்.

இலவங்கப்பட்டை மற்றும் தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் காலை பருகி வர உடல் எடை குறையும். இது உடலில் சேரும் தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவும்.

சிறுநீரகப் பாதையில் உண்டாகும் தொற்றை சரி செய்யவும், கிருமிகளை அழிக்கவும் இந்த கலவை மிகவும் உதவியாக இருக்கும். அதோடு சிறுநீர்ப்பை தொற்றை சமாளிக்கவும் உதவுகிறது.

இலவங்கப்பட்டை மற்றும் தேன் கலவையானது உடலின் தேவையற்ற கொழுப்பை கரைக்கின்றன. எனவே இதய பாதிப்புக்கு காரணமாக இருக்கும் கொழுப்பு கரையும்போது இதய செயல்பாடுகளும் சீராக இயங்குகின்றன.

தேன் மற்றும் இலவங்கப்பட்டை பொடி இரண்டையும் குழைத்து பருக்கள் மீது தடவவும். இரவு தூங்கும் முன் தடவி விட்டு படுங்கள். மறுநாள் கழுவுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்து வர பருக்கள் முற்றிலும் போய்விடும். இந்த கலவை முகப்பரு மட்டுமல்லாது தோல் அழற்சி, ஒவ்வாமை போன்ற பல தோல் பிரச்னைகளுக்கும் பயன்படுத்தலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபுரட்டாசியில் அசைவம் சாப்பிட கூடாது என்பதற்கான காரணம் என்ன‌?
Next articleகெட்ட கனவுகள் பலிக்காமல் இருக்க வேண்டுமா!