பொள்ளாச்சி விவகாரம் தற்போது தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் சென்னை பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது ஆராதனா பெண்கள் தங்கும் விடுதியில் அழகிய பெண்கள் குறிவைக்கப்பட்டு வசதியான ஆண்களுக்கு இரையாக்கப்படும் சம்பவம் அம்பலமாகியுள்ளது.
வார்டன் ஆனந்தி விடுதியில் அழகிய பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து, , அவர்களிடம் வசதிபடைந்த இளைஞர்களின் நட்பை ஏற்படுத்தி தருவதாக ஆசைவார்த்தை கூறி நட்சத்திர ஹொட்டல்கள் மற்றும் பண்ணை வீடுகளுக்கு அழைத்து சென்றுள்ளார்.
ஆண்கள், குறித்த பெண்களுக்கு மதுவை ஊற்றிக்கொடுத்து அவர்களை தங்கள் வலையில் விளவைத்து தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டனர்.
இதில் மதுரையை சேர்ந்த மாணவி, பணக்கார ஆண்கள் மற்றும் ஆனந்திக்கு ஒத்துழைப்பு கொடுக்காத காரணத்தால் அவரை அடித்து துன்புறுத்தி வெளியில் விரட்டியுள்ளார்.
இந்த மாணவி மட்டும் அல்ல பல இளம் பெண்களின் வாழ்க்கையை வார்டன் ஆனந்தி சீரழித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகார் அளித்தும் வார்டன் ஆனந்தி, தாமஸ், ஆறுமுகம் உள்ளிட்டோர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், வழக்கறிஞர் இருவர் மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவி வேதனை தெரிவித்துள்ளார்.