அள்ளி அள்ளி தந்த விஜயகாந்த் கடனாளி ஆனது எப்படி! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

0

தமிழ் திரையுலகின் முன்னணி நாயகனாகவும் அரசியல் களத்தில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த விஜயகாந்தின் சொத்துக்களுக்கு வந்திருப்பது அவரது தொண்டர்களை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு திரையுலகில் போட்டியாக விளங்கியவர் விஜயகாந்த். திரையுலகில் இவர் நடித்து வந்த காலகட்டத்தில் அதிகபட்சமாக ஒரு படத்திற்கு 5 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் திருமண மண்டபம், பொறியியல் கல்லூரி, விவசாயம், கேப்டன் டிவி என பல்வேறு தொழில்களிலும் விஜயகாந்த் ஈடுபாட்டுடன் இருந்தார்.

ஆனால் இவை எதையுமே விஜயகாந்த் சுயமாக நிர்வகிக்கவில்லை. திரைப்படம் மூலமாக வரும் சம்பளப்பணம் முதல் பிற தொழில்கள் மூலமாக வரும் வருமானங்களை வரை அனைத்தையும் பிரேமலதா தான் நிர்வகித்து வந்துள்ளார். பிரேமலதா அரசியலில் ஆர்வம் காட்ட ஆரம்பித்த பிறகு அவரது சகோதரரும் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் கணக்கு வழக்குகளை பார்த்து வந்துள்ளார்.

இதற்கிடையே காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூரில் விஜயகாந்துக்கு ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி சொந்தமாக உள்ளது. ஒரு காலத்தில் ஓஹோவென இருந்த இந்த கல்லூரி திறமையற்ற நிர்வாகம் காரணமாக தற்போது தள்ளாடி வருகிறது. அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத காரணத்தினால் ஆண்டாள் அழகர் கல்லூரியில் மாணவர் சேர்க்கை அறவே கிடையாது.

இதனால் வருமானம் இல்லாத நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் சொத்துக்களை அடமானம் வைத்து சுமார் 6 கோடி ரூபாய் கடனாக பெற்று உள்ளனர் பிரேமலதா மற்றும் எல் கே சதீஷ். கல்லூரி மேம்பாட்டுக்கு என்று கூறி அந்தக் கடனைப் பெற்று சுமார் 5 ஆண்டுகள் வரை ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை நிர்வகித்து வந்துள்ளனர். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு கல்லூரியில் வருமானமோ முன்னேற்றமும் இல்லை.

இதனால் ஐஓபி வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டியை மட்டும் அவ்வப்போது பிரேமலதா மற்றும் சுதீஷ் கட்டி வந்துள்ளனர். இதற்கிடையே அரசியல் களத்தில் இருவரும் தீவிரமாக இறங்கியதால் ஆண்டாள் அழகர் கல்லூரி மட்டுமல்லாமல் கேப்டன் டிவி உள்ளிட்ட பிற தொழில் நிறுவனங்களையும் அவர்கள் இருவராலும் சரியாக கவனிக்க முடியவில்லை. விஜயகாந்தின் ஆடிட்டரும் ஆண்டாள் அழகர் கல்லூரியின் மீதுள்ள கடன் குறித்து முதலிலேயே சுதீஷ் மற்றும் பிரேமலதாவை எச்சரிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

கடைசி நேரத்தில்தான் கடன் மற்றும் அதற்கான வட்டி மலைபோல் அவர்கள் முன்னர் வந்து நின்று உள்ளது. கையில் பணம் கருப்பாக இருந்தாலும் வங்கியில் கடனை அடைக்க வேண்டும் என்றால் வெள்ளையாகத்தான் செலுத்த முடியும். இதனால் மூன்று மாத காலம் பிரேமலதா ஐஓபி வங்கி நிர்வாகத்திடம் அவகாசம் கேட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் ஏற்கனவே போதுமான அவகாசம் கொடுத்து விட்டதாகவும் எனவே பணத்தை உடனடியாக தரவில்லை என்றால் அடமானம் வைக்கப் பட்டுள்ள ஆண்டாள் அழகர் கல்லூரி மற்றும் விஜயகாந்தின் வீடு ஆகியவற்றை ஏலத்தில் விடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஆனால் இதனை பிரேமலதா சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்த நிலையில்தான் திடீரென விஜயகாந்தின் சொத்துக்களை ஏலம் விடுவதாக செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்து அதிர வைத்துள்ளது ஐஓபி வங்கி நிர்வாகம். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரேமலதா மற்றும் சதீஷ் உடனடியாக செய்தியாளர்களை சந்தித்து தங்கள் தரப்பு விளக்கத்தை கொடுத்துள்ளனர்.

ஆனாலும் அவர்கள் இருவரின் அலட்சியம்தான் விஜயகாந்தின் சொத்துக்கள் ஏலத்திற்கு வரும் அளவிற்கு நிலைமை மோசமாக காரணம் என்று கூறுகிறார்கள். ஒரு காலத்தில் வீடு தேடி வரும் அனைவருக்கும் வயிறு நிறைய சாப்பாடு போட்டு கௌரவமாக வாழ்ந்து வந்த விஜயகாந்த் தற்போது அவரது மனைவி மற்றும் மைத்துனரால் அவமானப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என்று இணையத்தில் பலர் விமர்சித்து வருகிறார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article100 மி.லி தேங்காய்ப்பாலில் இவ்வளவு சத்துக்களா! மாரடைப்பு கூட வராமல் தடுக்கும் தெரியுமா!
Next articleமலைப்பாம்புடன் விளையாடும் நடிகை மடோனா சபாஸ்ட்டின்! வைரலாகும் புகைப்படம்!