நில வேம்பு கசாயம் செய்து குடிக்கும் முறை! யாரெல்லாம் குடிக்ககூடாது தெரியுமா!

0

நில வேம்பு கசாயம் செய்து குடிக்கும் முறை! யாரெல்லாம் குடிக்ககூடாது தெரியுமா!

நிலவேம்பு வெறும் உடலில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதை மட்டும் செய்வதில்லை. உடல் வலிமை, குடல் பூச்சிகள் அழிய, டெங்கு, பன்றி காய்ச்சல் போன்ற அனைத்து கொடிய வியாதிகளையும் தீர்க்கும் சர்வ ரோக நிவாரணி நிலவேம்பு.

நிலவேம்பு இலையை அரைத்து பாலுடன் கலந்து காலையில் உட்கொள்ள உடல் வலுவாகும். பாம்புக் கடிக்கு இதன் இலையை கசப்புச் சுவை தோன்றும் வரை தின்னும்படி கொடுக்க கடி நஞ்சு நீங்கும்.

நிலவேம்பு கசாயம் அருந்தும்போது, அது ரத்தத்தில் தட்டணுக்கள் குறைவதை தடுத்து நிறுத்துவதோடு, தட்டணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் உதவுகிறது என்று சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கசப்பு சுவையுடைய நீண்ட இலைகளையுடைய சிறுசெடி. செடி முழுவதும் மருத்துவ குணம் உடையது. இது காய்ச்சல் அகற்றுதல், பசியுண்டாக்குதல், தாது பலபடுத்துதல், முறை நோய் தீர்த்தல் ஆகிய பண்புகளையுடையது. நிலவேம்பு, கண்டங்கத்திரி வேர் வகைக்கு கைபிடியளவு, சுக்கு 10 கிராம் சேர்த்து ஒரு குவளைக்கு அரை குவளையாகக் காய்ச்சி நாளைக்கு 3 முறையாகக் குடிக்க மலேரியா, சிக்குன்குனியா காய்ச்சல் குணமாகும்.

காய்ச்சல் இருப்பவர்கள் காலை மாலை என ஒரு நாளைக்கு 2 வேளை குடிக்க வேண்டும். காய்ச்சல் நிற்கும் வரை குடிக்கலாம். சர்க்கரை நோயாளி வாரம் 3 முறை குடித்து வந்தால் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

நிலவேம்பு கசாயம் தயாரிப்பு:

நிலவேம்புப் பொடி 10 கிராம் எடுத்துக்கொண்டு 400 மி.லி. தண்ணீரில் கலந்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இந்த நீர் 50மி.லி.யாக, அதாவது எட்டில் ஒரு பாகமாக ஆகும்போது, அதை எடுத்து வடிகட்டி குடிக்கலாம். இது ஒரு நபருக்கான அளவு.

யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?

இந்த கசாயத்தை தயார் செய்த 4 மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும்.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது.

ஏழு வயது குறைவான குழந்தைகளுக்கு இந்த மருந்தை மருத்துவரின் பரிந்துரையில்லாமல் கொடுக்கக்கூடாது.

காய்ச்சல் வந்து தொடர் வாந்தி, வயிற்றுவலியால் கஷ்டப்படுகிறவர்களுக்கு இந்த கசாயம் கொடுக்கக்கூடாது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதினமும் சோற்றுக் கற்றாழை சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!
Next articleமூட்டு வலி தீர்க்கும் முடக்கறுத்தான் கீரை!