“Blue Whale” போலவே உயிர் பலி வாங்கும் மோமோ சவால் என்ற விளையாட்டு தற்போது சிறுவர்களிடையே பரவுகிறது.
மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வடிவத்தை ஜப்பான் நாட்டு அனிமேஷன் நிறுவனம் ஒன்று உருவாக்கி மோமோ என்று பெயரிட்டது.
இந்த உருவத்தை அடையாள சின்னமாக கொண்ட விளையாட்டு முகநூல் குழுக்களில் முதலில் அறிமுகமானது. இப்போது வாட்ஸ் அப்பில் வலம் வரும் இந்த விளையாட்டில் ஈடுபடுவோருக்கு அடுத்தடுத்து சவால் விடுக்கும் வகையில் விசித்திரமான படங்கள் வரும்.
அந்த படங்களை தொடர்ந்து மனதை பாதிக்கும் வகையில் காட்சிகளும், அந்தரங்க தகவல்களை சேகரிக்கும் வகையிலான கேள்விகளும் வரும். தொடர்ந்து விளையாடுவோரை தற்கொலையை நோக்கி துண்டுவது போல கட்டளைகள் வருவதாக மெக்சிகோ மற்றும் ஸ்பெயின் போலீசார் கூறியுள்ளனர்.
அர்ஜெண்டினாவின் போனஸ்ஏர்ஸ் நகரில் மோமோ விளையாடிய 12 வயது சிறுமி தற்போது தற்கொலை செய்ததை அடுத்து அந்நாட்டில் மட்டுமின்றி, ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகள் தங்கள் குடிமக்களை உஷார்படுத்தி உள்ளன.





