தன் திருமணம் குறித்து கூறிய காஜல் தற்போது ஆண் நண்பர் தோளின் மீது ஏறி அமர்ந்த நிலையில் !
தமிழ் சினிமாவில் இன்றுவரை ரசிகர்களின் மனதில் நல்ல இடம் வகித்து வருபவர் நடிகை காஜல் அகர்வால். சில மாதங்களாக காஜல் அகர்வால் நான் விரைவில் திருமணம் செய்துகொள்வேன் என்று கூறிவருகிறார். இதனால் இவருக்கு காதல் ஏதும் வந்து விட்டதோ என ரசிகர்கள் குளம்பியிருக்கும் நிலையில் இரு கைகளையும் நெஞ்சருகே உயர்த்தி காதல் சின்னம் போல் போஸ் தந்திருந்தார் காஜல்.
காஜலுக்கும் ஒரு பிரபல தொழிலதிபருக்கும் இடையில் காதல் உள்ளது என்ற செய்தி பரவல்லாக உள்ளது. அதை உணர்த்தும் விதமாக தான் இதயம் போன்ற சிம்பளை விரல்களில் காட்டி போஸ் தந்திருக்கிறார் என்கின்றனர் ரசிகர்கள். சீக்கிரமே காஜல் அகர்வால் திருமணம் நடக்கும் என்று அவரது தரப்பினர் கூறி வருகின்றனர்.
காஜல் அகர்வால் தற்போது புதிய படம் எதுவும் ஒப்புக்கொள்ளாமல் கால்ஷீட்டை ப்ரியாக வைத்திருக்கிறாராம். இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்ட இசைக்கச்சேரியில் கலந்து கொண்ட காஜல் அகர்வால் தனது நண்பரின் தோளின் மீது ஏறி அமர்ந்து கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மேலும் குளம்பிப்போய் உள்ளனர்.