அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு! பலாலி விமான நிலையம் குறித்து!

0

பலாலி விமான நிலைய அபிவிருத்தி நடவடிக்கைகளை எந்தவொரு வெளிநாட்டிற்கும் வழங்கப்போவதில்லை என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

A320 ரக விமானங்களைத் தரையிறக்கும் வகையில் விமான ஓடுதளத்தை புனரமைக்கும் பணிகளை முன்னெடுப்பதற்கு தேவையான நிதியை வழங்க சிவில் விமான சேவை அதிகாரசபை மற்றும் அபிவிருத்தி சபை என்பன இணங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் பேசிய அவர்,

“இது தொடர்பில் கள ஆய்வுகளை மேற்கொள்ளாது புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான ​சேவைகள் அமைச்சும் சுற்றுலாத்துறை அமைச்சும் இணைந்து அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.

இதேவேளை, பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகளை இந்தியாவிற்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்திற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇலங்கையர்கள் பலரின் மனதை நெகிழ வைத்த திருமணம்!
Next articleகலக்கத்தில் உலக நாடுகள்! ஐ.நா கூட்ட தொடரில் ட்ரம்ப் விடுத்துள்ள திடீர் அறிவிப்பு!