அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் போலத் தோற்றமளிக்கும் ஸ்பெயின் நாட்டுப் பெண் சமூக ஊடகங்களில் ஒரே நாளில் புகழ்பெற்றுள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் கலிசியா என்னும் ஊரைச் சேர்ந்த டொலோரஸ் லீஸ் என்கிற 64வயதுப் பெண்மணி மிகப்பெரிய பண்ணையில் பயிர்த்தொழில் செய்து வருகிறார்.
வேளாண்மை தொடர்பாக இவரிடம் பேட்டி எடுத்த செய்தியாளர், இவர் தோளில் மண்வெட்டியை வைத்துக்கொண்டு தோட்டத்தில் நிற்கும் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இவர் டொனால்டு டிரம்ப் போலத் தோற்றமளிப்பதால் ஒரேநாளில் எதிர்பாராத அளவுக்கு இவர் புகழ் சமூக வலைத்தளங்களில் பரவியது.
டிரம்புக்கும் இவருக்கும் குறிப்பிடத் தக்க ஒரு வேறுபாடு டொலோரஸ் லீஸ் செல்பேசி பயன்படுத்துவதில்லை.





