அமெரிக்கா வெளியிட்டுள்ள புதிய தகவல்! ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் மாற்றம்!

0

சீனா கடன் இராஜதந்திரத்தை பயன்படுத்தி தமது உலகளாவிய செல்வாக்கை விரிவுபடுத்தி வருவதாக அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கையின் துறைமுகம் (ஹம்பாந்தோட்டை) பீஜிங்கின் ‘நீல நீர் கடற்படை’ இராணுவத் தளமாக விரைவில் மாறும் என்பது அதற்கு சிறந்த உதாரணமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹட்சன் நிறுவனத்தில் அண்மையில் இடம்பெற்ற வெளியுறவு கொள்கை தொடர்பான ஒரு முக்கியமான உரையிலேயே அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கூறுகையில்,

ஆசிய, ஆபிரிக்க, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்க நாடுகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நூற்றுக்கணக்கான பில்லியன் டொலர்களை சீனா கடனாக வழங்கி வருகின்றது.

அந்த கடனுக்கான விதிமுறைகள் மற்றும் நலன்கள் பெருமளவில் பீஜிங்கிற்கு சாதகமானதாகவே அமைகின்றன.

இது தொடர்பில் கேள்விக்குரிய, வணிக மதிப்புடன் ஒரு துறைமுக உருவாக்க அனுமதிக்கு சீன அரசு நிறுவனங்களிடமிருந்து பெரும் கடனைப் பெற்ற இலங்கையை கேளுங்கள் என்றும் அமெரிக்க உப ஜனாதிபதி கூறியுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், அந்த நாட்டினால் பணம் செலுத்துவதற்கு இனிமேல் முடியாது என்றும், எனவே புதிய துறைமுகத்தை நேரடியாக சீனாவின் கையில் ஒப்படைக்குமாறு பீஜிங் அழுத்தம் கொடுத்தது.

எனவே, அது விரைவில் சீனாவின் வளர்ந்து வரும் நீல நீர் கடற்படைக்கு ஒரு முன்னோக்கிய இராணுவ தளமாக மாறும் என்றும் அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநோட்டா திரை விமர்சனம்
Next articleமூவருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை! கிளிநொச்சியில் பிடிக்கப்பட்ட 7 சிறுவர்கள்!