அமெரிக்காவில் 17 லட்சம் பேரை வெளியேறுமாறு அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது! Live Video

0
582

அமெரிக்காவை புளோரன்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள 48 மணி நேரத்தில் அதிசக்தி வாய்ந்த புயல் தாக்கும் எனவும் இதன் தாக்குதல் பாதிப்பு கடுமையாக இருக்கும் எனவும் வானிலை மையம் கணிப்பு வெளியிட்டுள்ள நிலையில் 17 லட்சம் பேரை அப்பகுதியிவிலுந்து வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

குறித்த புயல் வடக்கு மற்றும் தெற்கு கரோலினா வேர்ஜினியா ஆகிய மாநிலங்களை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

193 கி.மீ. வேகத்தில் வீசும் இந்தப்புயலின் பாதிப்பு கடுமையாக இருக்கும் எனவும் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் வானிலை இலாகா கணித்துள்ளது.

எனவே 3 மாகாணத்திலும் கடலோர பகுதி மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 17 லட்சம் பேரை வெளியேற உத்தர விடப்பட்டுள்ளது.

மேலும் இந்தப் புயலினால் ஏராளமான கட்டிடங்கள் சேதம் அடையும எனவும் கடல் கொந்தளிப்பால் தண்ணீர் ஊருக்குள் புகுந்து வெள்ள அபாயம் ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோன்று; தெற்கு சீன கடல் பகுதியில் ஓம்போங் என்ற புயல் உருவாகி உள்ளது. இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் பிலிப்பைன்சை தாக்கும் என்றும். இதில் அங்குள்ள லூசான் தீவு கடுமையாக பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஇலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷ ரெஜிமென்ட் தரப்பில் களமிறங்கப் போகும் வேட்பாளர்!
Next articleஇந்த மாஸ்க்கை நைட் தூங்கும் முன் போடுங்க காலையில் வெள்ளையா தெரிவீங்க!