அப்படியான கெட்ட பழக்கம் உள்ளவரா நீங்கள்! உடனே நிறுத்திக்கொள்ளுங்கள் விடுபடுவதற்கு சில டிப்ஸ்!

0

அப்படியான கெட்ட பழக்கம் உள்ளவரா நீங்கள்! உடனே நிறுத்திக்கொள்ளுங்கள் விடுபடுவதற்கு சில டிப்ஸ்!

மன அழுத்தம் மற்றும் பாலியல் டென்ஷன்களை நீக்க சுய இன்பம் காண்பது உதவுவதால், அது உடல் நலத்திற்கு நல்லது என பலரும் கூறுகின்றனர். ஆனால் சுய இன்பம் காண்பதால் அதற்கு நாம் அடிமையாகி விடுகிறோம் என்பதே உண்மையாகும். இதனால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நீங்கள் பல வலிகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

ஆய்வுகளின் படி, ஒரு வாரத்திற்கு 3 முதல் 7 தடவை வரை சுய இன்பம் காணலாம். ஆனால் இந்த கணக்கு அதிகரிக்கையில் தான் நீங்கள் அதற்கு அடிமையாகி விடுகிறீர்கள். அளவுக்கு அதிகமாக சுய இன்பம் காண்கையில் ஆண்கள் மற்றும் பெண்களின் பிறப்புறுப்புகளில் புண்களும் வீக்கமும் ஏற்படும்.

இது உங்கள் பாலியல் வாழ்க்கையை பெரிதளவில் பாதிக்கலாம். சுய இன்பம் அனுபவிப்பதற்கு அடிமையாகாமல் இருப்பதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளது. இந்த பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு பல வகையான வழிகளும் இருக்கவே செய்கிறது.

அதனை தூண்டும் சில விஷயங்கள நீங்கள் தவிர்க்கலாம் அல்லது நிராகரித்தே விடலாம். சில புதிய பழக்கங்களை பின்பற்ற தொடங்கலாம்.

இதோ சில வழிகள். இந்த எளிய வழிகள், ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி, பாதுகாப்பானதாக இருக்கும்!

புதிய பழக்கங்களை விரும்ப தொடங்குங்கள்

புதிய பொழுது போக்கில் ஈட்டுபட்டால், உங்கள் மனது அதனை நோக்கி திசை திரும்பும். இதனால் நீங்களும் அதில் பிசியாக இருப்பீர்கள். அதனால் நீச்சல், உடற்பயிற்சி, உடலை கட்டுக்கோப்பாக வளர்த்தல் போன்ற புதிய பொழுது போக்கில் ஈடுபடுங்கள்.

விளையாட்டில் ஈடுபடுங்கள்
கால் பந்து, எறிபந்து மற்றும் கூடைப்பந்து போன்ற சில விளையாட்டுக்களில் ஈடுபடலாம். இந்த விளையாட்டுக்கள் உங்களை ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்க உதவும்.

தனிமையை தவிர்க்கவும்
நீங்கள் தனியாக இருக்கையில், பொழுதை கழிக்க இதில் எல்லாம் தான் கவனம் செல்லும்.

ஆன்மீகம் உதவும்

ஆன்மீகத்தில் ஈடுபட்டால் உங்கள் மனம் அமைதி பெறும். அதனால் ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் ஈடுபட்டு இந்த தீய பழக்கத்தை கைவிட முயற்சி செய்யுங்கள்.

மனதிடம் பேசுங்கள்

சுய இன்பம் காண்பதை நிறுத்த, உங்களுக்கு வேண்டியது மன உறுதி தான். இந்த பழக்கம் பிறப்பது மனதில் இருந்து தான். அதனால் உங்கள் மனதுடன் பேசுங்கள்.

கைகளை சுறுசுறுப்பாக வைத்திடுங்கள்
தோட்ட வேலை அல்லது வீடியோ கேம் விளையாடுவது போன்ற வேளைகளில் ஈடுபடுங்கள்.

அந்த பொம்மைகளை தூக்கி எறியுங்கள்

சில விலையுர்ந்த பொம்மைகளை தூக்கி எரியுங்கள்.

உணவு பழகத்தில் மாற்றம்

சுறுசுறுப்பாக பணியை செய்ய அதற்கு தேவையான ஆற்றல்களை பெறுவதற்கு அதற்கான உணவுகளை உண்ணுங்கள்.

தியானம்
தியானம் என்பது மனதுக்கும் உடலுக்கும் நல்லது. தியானத்தில் ஈடுபடும் போது, பிற விஷயங்களை பற்றி சிந்திக்க, மனதும் உடலும் ஒத்துழைக்கும்.

Previous articleஅல்சர் நோயால் அவதிப்படுகிறீர்களா! உங்களுக்கு சிறந்த சிகிச்சை முறை!
Next articleமூல நோயால் அவதிப்படுகிறீர்களா? மூல நோய்க்கு சிறந்த‌ மருந்தாகும் மாங்கொட்டை!