அபிநந்தனின் மனைவியா இவர்! வைரலாகும் ஆக்ரோஷமாக பேசிய வீடியோ!

0
582

சமூக வலைதளங்களில் அபிநந்தனின் மனைவி என கூறப்பட்ட பெண் ஆக்ரோஷமாக பேசிய வீடியோ வைரலான நிலையில் அது அவரின் மனைவி இல்லை என தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த இந்திய விமானி அபிநந்தன் நேற்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதற்கிடையே, வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் பெண்ணொருவர் அரசியல்வாதிகள் ராணுவ விவகாரங்களை அரசியலாக்கக் கூடாது எனக் குறிப்பிடும் வீடியோ வைரலாகி வருகிறது.

அதில், தான் ஒரு ராணுவ அதிகாரியின் மனைவி என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் அந்தப் பெண், எல்லா இராணுவ வீரர்களின் குடும்பத்தினரின் சார்பாக இந்த வீடியோவை பதிவிடுகிறேன். சக இந்தியர்கள், குறிப்பாக அரசியல் தலைவர்கள், நம் இராணுவ வீரர்களின் தியாகங்களை தயவுசெய்து அரசியலாக்காதீர்கள்.

இராணுவ வீரராக இருப்பது மிகவும் கடினம். பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியிருக்கும் அபிநந்தனின் குடும்பம் அனுபவித்துக் கொண்டிருக்கும் வலி, வேதனையை கொஞ்சமாவது நினைத்துப் பாருங்கள்.

எல்லையில் பதற்றம் சூழ்ந்திருக்கும் வேளையில் உங்கள் பிரச்சாரப் பேரணிகளை நிறுத்தி வையுங்கள். அங்கே உங்களது அரசியலுக்காக இராணுவ வீரர்களின் தியாகத்தைப் பயன்படுத்திக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு அரசியல் செய்வதற்கு இங்கே போதுமான நேரம் இருக்கும்போது, இராணுவ வீரர்களின் தியாகத்தை அரசியலுக்காக பயன்படுத்தாதீர்கள் என கூறியுள்ளார்.

இந்த வீடியோவில் இருப்பவர் அபிநந்தனின் மனைவி என்று ஒருபுறம் செய்தி பரவி வரும்நிலையில், அது பொய் என்கிற தகவல் இப்போது உறுதியாகியுள்ளது.

Previous articleபாகிஸ்தானில் நடந்தது என்ன! அபிநந்தனின் காணொளியில் நடந்த தில்லு முல்லு அம்பலம்!
Next article2019 இல் ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவித்தது இவர்கள் தான்! நம்ம ரகுமான் என்ன ஆனார்!