அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய பிரதமர் மோடியின் செயல்!

0

கடந்த சில மாதங்களாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் பதற்றமான சூழ் நிலை நிலவிவந்த நிலையில் தேசிய தினம் கொண்டாடும் பாகிஸ்தான் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளமை பாகிஸ்தான் மற்றும் இந்திய மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

லாகூர் ஒப்பந்தத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 23-ந்தேதி பாகிஸ்தான் தேசியதினம் கொண்டாடப்படுகிறது.

அதைதொடர்ந்து பிரதமர் நரேந்திரமோடி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். அதில், ‘‘தேசிய தினம் கொண்டாடும் பாகிஸ்தான் மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

துணை கண்டத்தில் பயங்கரவாதம் மற்றும் வன்முறை இன்றி ஜனநாயகம், அமைதி மற்றும் செல்வசெழிப்புடன் மக்கள் இணைந்து வாழும் நேரம் இது’’ என தெரிவித்துள்ளார்.

அதற்காக பிரதமர் மோடிக்கும் இம்ரான்கான் நன்றி தெரிவித்தார். அதிலும் ‘‘இந்தியாவுடன் பேச்சு தொடங்க இது ஒரு நல்ல தருணமாக கருதுகிறேன். அதன்மூலம் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும். இருநாட்டு மக்களுக்கும் இடையே அமைதி, வளமையுடன் கூடிய புதிய உறவு தேவை’’ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅரிய நோயினால் லண்டனில் உயிருக்கு போராடிய தமிழ் சிறுமி! மீண்டு வந்த நெகிழ்ச்சி!
Next articleமெய் மறந்து சிரிக்க வைக்கும் பிறந்தநாள் சொதப்பல்கள்! வைரலாகும் காட்சி!