காமெடி நடிகர் சதீஷ் அந்தரத்தில் மிதந்து நிற்பது போல் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில், முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சதீஷ்.
இவர் தொடர்ந்து குணச்சித்திர வேடம், வில்லன், காமெடி என்று எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், சிறப்பாக நடிக்க கூடியவர்.
நடிகர் சிவகார்த்திகேயன் நண்பரும் காமெடி நடிகருமான சதிஷ் அவரது டிவிட்டர் பக்கத்தில் அந்தரத்தில் மிதந்து நிற்பது போல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ கொஞ்சம் யோசிக்கும் படியும் முடிவில் சிரிக்கும் படியும் அவர் அதை விடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Ennangada ore kozhappama irukku….!?!?!?????? pic.twitter.com/3LHFy7j3H0
— Sathish (@actorsathish) March 20, 2019




