நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் அர்ச்சகர் தவறி கீழே விழுந்து தலையில் அடிபட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்ததைத் தொடர்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தவறி விழுந்து மரணம்
நாமக்கல்லில் உள்ள ஒரு கோவிலில் உள்ள மிகப்பெரிய ஆஞ்சநேயர் சிலைக்கு அர்ச்சகர் வெங்கடேசன் என்பவர் மாலை அணிவிக்க மரத்தால் செய்திருந்த படிக்கட்டில் ஏறினார். அப்போது அவர் மாலையை ஆஞ்சநேயரின் கழுத்தில் அணிவிக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார்.
அதிக உயரத்தில் இருந்து கீழே விழுந்ததால் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த அர்ச்சகர் வெங்கடேசனை உடனடியாக அங்கிருந்த பக்தர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால் சிகிச்சையின் பலனின்றி அர்ச்சகர் வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் நாமக்கல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
            



