அதிர்ச்சியில் வைத்தியர்கள்! விசித்திரமாக பிறந்து உயிருடன் வாழும் சிறுமி!

0
442

ஊனம் என்பது உடம்பில் அல்ல மனதில் ஊனப்பட்டவர்களே உண்மையில் ஊனமானவர்கள் என நாம் கேள்வியுற்றுள்ளோம்.

அந்த வகையில் இந்த சிறுமிக்கு கைகள் கால்களிலோ பார்வையிலோ குறைப்பாடில்லை ஆனால் அதிகமாக கைகள் உருபெற்றுள்ளமையே இந்த சிறுமியின் குறைப்பாடாகும்.

இந்த உலகிற்கு பிரவேசித்த அந்த தருணம் குறித்த சிறுமயின் மார்பக பகுதியில் பிரத்தியேகமாக கைகள் இரண்டும் கைகளின் மேற்தசை தனியாகவும் உருப்பெற்ற நிலையிலேயே பிறப்பெடுத்துள்ளார்.

பிறந்து சுமார் 14 வருடங்கள் கடந்துள்ள நிலையில் குறித்த சிறுமிக்கு தற்பொழுது தனது பிரத்தியேக கைகள் மற்றும் கையின் மேற்தசையுடன் தனது வாழ்கையினை நிம்மதியாக வாழ சிரமப்படுகின்றார். இவர் பாடசாலைக்கு செல்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மார்பக பகுதியில் குறித்த உடல் அவையங்கள் காணப்படுகின்றமையினால் சத்திர சிகிச்சை செய்து முடிப்பதற்கும் வைத்தியர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

எனினும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த குறித்த சிறுமிக்கு தற்பொழுது தாய்லாந்தின் வைத்தியர்கள் குழாம் ஒன்று சத்திரசிகிச்சை செய்வதற்கு முன்வந்துள்ளது.

குறித்த சிறுமிக்கு சத்திரசிகிச்சை செய்வதனால் இதயத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என குறித்த குழுவில் அங்கம் வகிக்கும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து குறித்த சிறுமிக்கு சத்திரசிகிச்சையின் மூலம் உடலில் காணப்படும் மேலதிக அவையங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleமருத்துவமனை சென்று கலைஞரை பார்க்காமலேயே வெளியில் வந்த ரஜினிகாந்த்!
Next articleபெண்களுக்குகான சுதந்திரமும் பாதுகாப்பும் இல்லை! இப்படி நடந்துகொள்ளும் மிருகத்தை என்ன செய்வது?