உலகில் தென்படும் பாரிய அசம்பாவிதத்திற்கான அறிகுறி! அதிர்ச்சியின் விளிம்பில் மக்கள் !

0

பரந்துபட்ட இந்த உலகு நிச்சயமாக கடவுள் எமக்குக் கொடுத்த வரப்பிரசாதம் என அனைவராலும் நம்பப்படுகின்றது, இங்கு வாழும் மானுடர்கள் எல்லாம் ஏதோ ஒரு நியதியின்படி, ஒரு நேர அட்டவணையின் கீழ் பயணித்துக் கொண்டிருப்பதாய் தோன்றுகின்றது.

இந்த உலகும் கூட ஒரு திட்ட வரைவு ஒன்றின் கீழ் அதன் இயக்கங்களை கொண்டு செல்வது போன்ற ஓர் உள்ளுணர்வு.

இந்த உலகம் என்றுமே நிலையானவற்கைக் கொண்டிருப்பதில்லை. தினம் தினம் மாற்றங்கள் வந்த வண்ணமே உள்ளன.

மனிதர்களாயினும் சரி அல்லது விலங்குகள், இயற்கை என எதுவானாலும் சரி நொடிக்கு நொடி மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளன.

ஆனால் அவை தரும் படிப்பினைகளும் அறிகுறிகளும்தான் இன்னும் மனிதருக்கு புலப்படவே இல்லை.

அண்மையில் புனித பாப்பரசர் பிரான்சிஸ் அடிகளார் தென் சூடானுக்குச் சென்றிருந்த வேளை, அங்கு இடம்பெற்று வரும் உள்நாட்டு போரை முடிவுக்குக் கொண்டு வருமாறும் சமாதானத்தை நிலைநிறுத்துமாறும் கோரி அந்நாட்டின் தலைவர்கள் கால்களில் விழுந்து வணங்கி அவர்களின் பாதத்தை முத்தமிட்டு கோரிக்கை விடுத்தார்.

இந்த ஒரு நிகழ்வு உலக வாழ் மக்களை ஒரு கணம் ஸ்தம்பிதம் அடையச் செய்திருந்தது. பாப்பரசரின் இந்த செயலை எண்ணி அனைவரும் கண்ணீர் சிந்தினர். தாழ்மையின் மறு உருவாகவும, நடமாடும் இயேசுக் கிறிஸ்துவாகவும் பாப்பரசர் பிரான்சிஸ் போற்றப்பட்டார்.

இந்நிலையில், நேற்றைய தினம் அதே போல உலக வாழ் மக்களை ஸ்தம்பிதம் அடையச் செய்த நிகழ்வொன்று பிரான்ஸ் தலைநகர் பரிசில் இடம்பெற்றுள்ளது.

சர்வதேச ரீதியில் பிரபல்யமான பரிஸ் நகரில் அமைந்துள்ள நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயத்தில் பாரிய தீ விபத்து ஒன்று நேற்றைய தினத்தில் இடம்பெற்றிருந்தது.

850 வருடங்கள் பழைமையான குறித்த தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தின்போது ஆலயத்தின் பிரதான கட்டமைப்பு பாதுகாக்கப்பட்டது எனினும் கூரையும் ஆலயத்தின் இன்னும் சில பகுதிகளும் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.

இதேவேளை தேவாலயத்தின் பிரதான சின்னமாக கருதப்படும் உயராமான 63 மீற்றர் நீளமான கோபுரத்தை பாதுகாக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடியபோதும் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல், அந்த கோபுரம் முற்றிலும் எரிந்து இடிந்து விழுந்தன.

இந்த தீ விபத்தினால் ஆலயத்திற்குள் இருந்த சில வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த படைப்புக்கள் அழிந்துபோயுள்ளன என தகவல்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும் இயேசுக் கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபோது தலையில் சூட்டப்பட்டிருந்த முள்முடி என கருதப்படும் புனித முள் கிரீடம் மற்றும் சிலுவையில் அறையப்பட்டபோது பயன்படுத்தப்பட்ட அணிகளில் ஒன்று, 9ஆம் லூயி மன்னனின் ஆடை உட்பட சில பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உலகவாழ் கிறிஸ்தவர்கள் தற்போது தமது புனித வாரத்தினை அனுஷ்டித்து வரும் நிலையில் இவ்வாறானதொரு அசம்பாவிதம் இடம்பெற்றமை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன் பெரும் கவலையையும் வேதனையையும் தந்துள்ளது.

இந்நிலையில், ஆலயத்திற்கு முன்னால் இன்று காலை ஒன்று கூடிய பெருமளவான பக்தர்கள் கண்ணீர்விட்டு முழந்தாளில் இருந்து பிரார்த்தனைகளை செய்திருந்தனர்.

கடந்த ஓரிரு நாட்களுக்குள் நடந்த இந்த இரு சம்பவங்கள் பல கேள்விகளையும், வேதனைகளையுமே ஏற்படுத்தியுள்ளன. இந்த இரு சம்பவங்களும் உலகத்திற்கு ஏதோ ஓர் செய்தியை தாங்கி வந்திருப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது.

பாரிய அழிவு ஒன்று ஏற்படும் முன்னர் தென்படும் அறிகுறி போல இதுவும் ஏதோ ஒரு செய்திக்கான அறிகுறியாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

கிறிஸ்தவர்களை பொறுத்தவரையில் மீண்டும் இயேசுக் கிறிஸ்து இந்த மண்ணில் அவதரிப்பார் என்பது ஆத்மார்த்தமான நம்பிக்கை, அவரது மீள் வருகையையும் எதிர்பார்த்த வண்ணமே தமது பிரார்த்தனைகளையும் அனுதினம் மேற்கொள்வர்.

எனினும், இயேசுக் கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பினை நினைவு கூறும் இந்த புனித நாட்களில் தொடர்ச்சியாக தமக்கு வேதனை அளிக்கக் கூடிய செயல்கள் நடந்து வருகின்றமை நம்பிக்கையை உடைப்பதாய் அமைந்துள்ளது.

காலத்திற்கு காலம், பல அறிஞர்கள், தீர்க்கதரிசிகள் என பலரும் இந்த உலகத்தின் ஆயுட் காலம் பற்றியும் எதிர்வரும் காலங்களில் நிகழப்போகும் மாற்றங்கள் குறித்தும் பல தீர்க்கதரிசனங்களை முன்வைத்துள்ளனர்.

இச்சமயத்தில் திருவிவிலியத்தில் குறிப்பிடப்படும் இயேசுக் கிறிஸ்துவின் வருகை தொடர்பான ஒரு வசனம், II பேதுரு 3. 10. கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிற விதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்று போம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளுமெரிந்து அழிந்து போம். 11. இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடத்தையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்க வேண்டும்!

என இந்த இவ்யுகத்தில் பிரளயங்கள் மற்றும் இயற்கை சீற்றங்கள் எவ்வாறு அரங்கேறும் என்பதை விபரிக்கின்றது திருவிவிலியம். வேதங்களும் புராணங்களும் அருளியது போல விரைவில் இந்த உலகு தனது இறுதி அத்தியாயத்தை எட்டலாம். அல்லது இதனை மீட்க ஒரு தேவ தூதன் இந்த புவிதனில் அவதரிக்கும் காலம் நெருங்கி விட்டது எனலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅடிக்கடி கனவில் நாயை பார்க்கிறீர்களா? அப்போ உங்களை நோக்கி ஆபத்து வருதாம்!
Next articleஇன்றைய ராசிப்பலன் – 18.04.2019 வியாழக்கிழமை !