அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட வைத்தியர்! மனநோயாளிகளாக மாறும் இலங்கையர்கள்!

0

இணைய பாவனை காரணமாக இலங்கையர்கள் அதிகளவில் மனநிலை பாதிக்கப்படுவதாக மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்.

இலத்திரனியல் ஊடகங்கள், இணையம் போன்றவை முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதும், அவற்றுக்கு மக்கள் அடிமையாதலும், அபாயகரமான மட்டத்தை அடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலத்திரனியல் ஊடகங்கள், இணையம் ஆகியவற்றின் மூலம் கிடைக்கக்கூடிய நன்மைகளைத் தாண்டி, சமூகத்தில் கூடுதலான தீமைகள் ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளதென உளவியல் நிபுணர் வைத்தியர் அபேக்ஷா ஹேவாகீகன தெரிவித்தார்

இணைய துஷ்பிரயோகமும், இணையத்திற்கு அடிமையாதலும், போதைப்பொருள் துஷ்பியோகத்திற்குச் சமமான பாதக விளைவுகளை ஏற்படுத்திக்கூடியன. எனவே, இளம் தலைமுறை மத்தியில் கல்விக்காக புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்துவது பற்றி கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

தமது நாளாந்த செயற்பாடுகளை பாதிக்கும் வகையில் இணையத்தையோ, முகநூலையோ, திறன்பேசிகளையோ பயன்படுத்துதல் அடிமைத்தனமாகும்.

இரண்டு வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு இலத்திரனியல் ஊடக கருவிகளையோ, திறன்பேசிகளையோ பயன்படுத்த இடமளிக்கக்கூடாது. அதீத இணையப் பாவனை மூலம் மன அழுத்தம், பார்வைக் கோளாறுகள், செயற்றிறனில் வீழ்ச்சி, தூக்கமின்மை, முள்ளந்தண்டு நலிவடைதல் முதலான தீய விளைவுகள் ஏற்படுவதாக வைத்தியர் அபேக்ஷா ஹேவாகீகன தெரிவித்தார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதாயை கொலை செய்த மகனின் அதிர்ச்சி வாக்குமூலம்! நீ என்ன யோக்கியமா?
Next articleநோட்டா திரை விமர்சனம்