அதிரடி உத்தரவு! ஆண்மை பரிசோதனைக்கு தப்பித்த நித்தியானந்தா!

0

நித்தியானந்தாவுக்கு பெங்களூர் மருத்துவமனையில் நேற்று 6- ஆம் தேதி ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டு, இன்று 7ம ஆம் திகதி தேதி அவர் ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நிலை இருந்தது.

இந்நிலையில், ஆன்மை பரிசோதனைக்கு ஆஜராக மறுத்ததால் நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் உள்ள ராம்நகரம் மாவட்டம், பிடதியில் சாமியார் நித்தியானந்தா ஆசிரமம் நடத்தி வருகிறார். அவர் மீது பெண் சீடர் ஆரத்தி ராவை பாலியல் பலாத்காரம் செய்தது, ஆசிரம பக்தை கொலை வழக்கு, போதை பொருட்கள் சேமிப்பு உட்பட பல்வேறு வழக்குகள் பிடதி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள் ராம்நகரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

இந்த வழக்கில் அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த பெங்களூர் பொலிசார் முடிவு செய்த போது, மெடிக்கல் ரிப்போர்ட் எடுக்க மறுத்தார் நித்தியானந்தா.

மெடிக்கல் ரிப்போர்ட் எடுக்க உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. பின்னர் 2017ல் ஒரு பொய்யான மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்து, வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று நித்தியானந்தா உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தார். அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பொலிசார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து நித்தியானந்தாவிற்கு ஆண்மை பரிசோதனை நடத்தலாம் என்று ராம்நகர் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

ஆனாலும் நித்தியானந்தா ஆண்மை பரிசோதனைக்கு ஆஜராகவில்லை, , இதனால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரை கைது செய்ய பொலிசார் தேடி வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநீங்க எந்த ராசிக்காரர்? அதை வெச்சு சூப்பரான விடயத்தை தெரிஞ்சிக்கலாம்!
Next articleஎன்ன நடக்கப் போகிறது? தீர்ப்பிற்கு பின் 7 தமிழர்களும் எடுத்துள்ள முக்கிய முடிவு!