அடிவயிற்று சதையை விரைவாக கரைக்க இந்த ஒரு பொருள் போதும்! நன்றாக வறுத்து சாப்பிடுங்க?
விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் போன்றனவற்றைக் கொண்ட ஒரு அவுன்ஸ் பாதாம் பருப்பில் 1/8 பங்கு பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு தேவையான புரோட்டீன் சத்து அடங்கியுள்ளதனால், நமது தினசரி உணவில் பாதாம் பருப்பை சேர்த்து கொள்ளும் போது அதிலுள்ள நல்ல கொழுப்பு அமிலங்கள் மூலம் உடல் எடையை இலகுவாக குறைக்க முடியும்.
தொப்பையை குறைக்க
பாதாம் பருப்பில் அதிக அளவு புரோட்டீன் சத்து இருப்பதனால் வலுவான தசைகளின் உருவாக்கத்திற்கு உதவிபுரிகின்றதுடன், இதிலுள்ள மோனோசேச்சுரேட் கொழுப்பு அமிலங்கள் மூலம் உடல் நிறை குறியீட்டு எண்ணை கட்டுப்பாட்டில் வைக்க முடிவதுடன், தொப்பையை குறைக்கவும் முடிகின்றது.
உடல் எடையை குறைக்க
பாதாம் பருப்பை உங்கள் காலை உணவில் சேர்க்கும் போது நீண்ட நேரம் பசி உணர்வு தூண்டப்படுதனை தவிர்ப்பதுடன், வயிறு நிரம்பி இருப்பது போன்ற எண்ணத்தை உருவாக்குவதன் மூலம் மதிய உணவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளமுடியும். நன்றாக வறுத்த பாதாம் பருப்பை அவுன்ஸ் கணக்கில் எடுத்து பசி ஏற்படும் போதெல்லாம் சாப்பிடுவதன்; மூலம் உடல் எடையை எளிதாக குறைக்க முடியும். மேலும், ஓட்ஸ் மற்றும் செரல் உணவுகளில் அப்படியே நறுக்கிய பாதாம் பருப்பை சேர்த்து சாப்பிடுவதுடன், மதிய வேளைகளில் பாதாம் ரைத்தா தயாரித்து உண்ணலாம்.
மேலும், நறுக்கிய பாதாம் பருப்பை பாஸ்தா அல்லது சாலட் உடன் சேர்த்தோ அல்லது நறுக்கிய பாதாம் பருப்பை யோகார்ட் உடன் சேர்த்து அதில் அப்படியே உங்களுக்கு பிடித்தமான கார மசாலாக்களை சேர்த்து தயாரித்து பருகலாம். இதில் நிறைய புரோட்டீன் மற்றும் நல்ல பாக்டீரியா இருப்பதனால் உடல் எடையை எளிதாக குறைக்க முடியும். இது கொஞ்சம் கடினமான உணவு என்பதனால் கொஞ்சமாக உங்கள் வயிறு நிரம்பும் அளவிற்கு எடுத்து கொள்ளுவது அவசியமாகும்.இப்படி தினசரி உங்கள் உணவில் பாதாம் பருப்பை சேர்த்து வருவதோடு போதுமான உடற்பயிற்சியும் மேற்கொண்டு வந்தால் உடல் எடையை குறைக்கும் கனவு மிகவும் எளிமையாக நிறைவேறிவிடும்.
By: Tamilpiththan