அடிக்கடி மறதி குணப்படுத்த முடியுமா! தீர்வு என்ன!

0

உங்கள் வயதில் ஞாபக மறதி என்றால் பெரும்பாலும் அசிரத்தை, வேலை நெருக்கடிகள், பல விடயங்களில் ஒரே நேரத்தில் ஈடுபடுதல், ஈடுபாடின்மை, தூக்கக் குறைபாடு போன்றவையே காரணமாக இருக்கும்.

ஒருவரின் பெயரையோ போன் நம்பரையோ, செய்ய வேண்டிய பல வேலைகளில் ஒரு சிலவற்றையோ மறப்பது எவருக்குமே இயல்பானதுதான். ஆனால் தனது கைபேசியை எப்படி இயக்குவது என்பதையே மறப்பதாக இருந்தால் அது சற்று தீவிரமானதாகக் கொள்ள வேண்டும்.

மறதி பற்றி பலரது பயங்களுக்கு முக்கிய காரணம் அது ஏதாவது தீவிர நோயின் அறிகுறியாக இருக்குமோ என்பதுதான். அல்சைமர் நோயாக இருக்குமோ அல்லது மூளைச்சிதைவினால் (Alzheimer’s disease and dementia) ) ஏற்படும் மறதியோ என்ற பயம் பலருக்கு இருக்கிறது. அத்தகைய எதிர்மறைச் சிந்தனையே பலருக்கு மறதியைக் கொண்டுவந்துவிடுகிறது.

மது மற்றும் போதைப் பொருள் பாவனையாளர்களுக்கும் மறதி அதிகம். மனப் பதற்றம், பதகளிப்பு, மனச்சோர்வு போன்ற உளவியல் தாக்கங்களாலும் மறதி ஏற்படுகிறது. தைரொயிட் சுரப்பி குறைபாடு விட்டமின் B 12 குறைபாடு போன்றவற்றையும் சொல்லலாம். ஒரு சில வேளைகளில் வேறு நோய்களுக்காக உட்கொள்ளும் சில மருந்துகளும் காரணமாகலாம். கொழுப்பும் இனிப்பும் கூடிய ஆரோக்கியமற்ற உணவு முறையும் காரணம் என நம்பப்படுகிறது.

மறதியைக் குணமாக்குவதற்கு அதிசய மருந்து மாத்திரைகள் எதுவும் கிடையாது.

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டும். போதிய தூக்கம், போசாக்கான உணவு முறை, தினசரி உடற்பயிற்சி அல்லது உடல் உழைப்பு, போதிய ஓய்வு ஆகியவை அவசியம். நண்பர்களுடன் உரையாடவும் பொழுதுபோக்குகளுக்கும் நேரம் ஒதுக்குங்கள்;. உற்சாகமாக இருங்கள். சிரியுங்கள். இவை யாவுமே உங்கள் மனதை அமைதியாக்கி நினைவுகளை மறக்காமல் இருக்கச் செய்யும்.

பல வேலைகளை ஒரே நேரத்தில் தூக்கிப் பிடிக்காமல் ஒவ்வொன்றாக உங்கள் ஆற்றலுக்கும் நேரத்திற்கும் ஏற்றவாறு பணிகளை நிதானமாகச் செய்யவும்.

மூளைக்கு வேலை கெடுக்கக் கூடிய செஸ், எண்களுடன் அல்லது எழுத்துக்களுடன் கூடிய விளையாட்டுகள், அதே போன்ற கணனி விளையாட்டுகள் மூளையின் செயற்பாட்டைக் கூர்மையடைச் செய்யலாம்.

நீண்ட நாட்களாக ஒரே விதமான மறதி எனில் அதை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. மாறாக திடீரென ஏற்பட்டு தீவிரமாக அதிகரித்துச் செல்கிறதெனில் மருத்துவ ஆலோசனை அவசியம் பெற வேண்டும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇளைஞர் எடுத்த விபரீத முடிவு! இளம்பெண் கொடுத்த செக்ஸ் டார்ச்சர்!
Next articleகண்ணில் கருவளையம் தீர்வு என்ன!