பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா தன் படங்கள் மூலமாக பேசப்படுகிறாரோ இல்லையோ இப்படி தினம் ஏதாவதொரு செய்தியில் இடம் பெற்று விடுகிறார். பெரும்பாலும் தன் கணவர் விராட் கோலி மூலம் அதிகமாக பேசம்ப்படும் நாயகி என விமர்சிக்கப்படுகிறார்.
விராட்டையே ஆச்சரியத்திற்குள்ளாகும் அளவிற்கு அனுஷ்கா ஷர்மாவின் புகைப்படம் பரவி வந்தது. உண்மையிலேயே அவரா இப்படி மாறிவிட்டார்! என ஆராய்ந்ததில்தான் தெரிந்தது அது அனுஷ்கா ஷர்மா இல்லை. அனுஷ்காவைப்போல் தோற்றமளிக்கும் பெண் என…
ஆம் அனுஷ்கா ஷர்மாவைப் போல் தோற்றமளிக்கும் அந்தப் பெண்ணின் பெயர் ஜுலியா மைக்கேல்ஸ். அவர் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பிரபல மேடைப் பாடகர்.
அவரைப் போலவே தோற்றமளிக்கும் ஜூலியாவையும் அனுஷ்காவையும் ஒன்று சேர பார்த்தால் இருவரும் இரட்டைப் பிறவிகள் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு எல்லா பொருத்தங்களும் பக்காவாகப் பொருந்தியிருக்கின்றன.
சிலர் ஜூலியாவின் இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் உங்களுக்கு அனுஷ்காவைத் தெரியுமா? என கமெண்டுகளில் கேள்வி கேட்டு வருவதும், அவரை விட நீங்களே அழகாக இருக்கிறீர்கள் என்றும் கிண்டல் செய்து வருகின்றனர்.
நம் நெட்டிசன்களுக்கு சொல்லவா வேண்டும். உடனே இருவரின் புகைப்படங்களை வைத்து மீம் போட்டுத் தள்ளுகின்றனர்.







