அச்சத்தில் மக்கள்! இன்று அதிகாலை அடுத்தடுத்து ப‌திவாகிய நிலநடுக்கங்கள்!

0
480

உலகின் பல்வேறு பகுதிகளில் இன்று நில அதிர்வுகள் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி பப்புவா நியூகினியாவில் அந்த நாட்டு நேரப்படி இன்று அதிகாலை அடுத்தடுத்து பல நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

7 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கமும், இதனையடுத்து சுமார் 6 மற்றும் 5 ரிக்டர் அளவுகளிலான நிலநடுக்கங்களும் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,

எனினும் பாரிய நிலநடுக்கம் உள்ளிட்ட அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களின் போது நேர்ந்த பாதிப்புக்கள் குறித்து இதுவரையில் தகவல்கள் வெளியாகவில்லை என்ற போதிலும் இந்த நிலநடுக்கங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

மேலும், இன்று இந்தோனேசியாவின் பாலி தீவுகளில் 6 ரிக்டர் அளவிலான நில அதிர்வும், ரஷ்யாவில் 6.5 ரிக்டர் அளவிலான அதிர்வும் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவி சரிதவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Previous articleயுவதியின் அதிரடி செயற்பாடு! காதல் தோல்வியால் இரண்டாக பிளந்து போன இளைஞனின் உடல்!
Next articleகண்டுகொள்ளாத உறவினர்களால் குழப்பம்! வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பெண்!