‘அசிடிட்டி’ யை குணப்படுத்தும் எளிய வழிகள்!

0
615

‘அசிடிட்டி’ எனப்படும் வயிற்றில் ஏற்படும் அமில சுரப்பு பிரச்சனையால், அவதியுறுவோர் ஏராளம்!

குறிப்பாக மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ட பின்னர் இத்தகையோருக்கு நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படுவது அதிகம்.

இவற்றை தடுப்பதற்கும், குணப்படுத்துவதற்கான எளிய வழிகள் இதோ!

பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்கள் மற்றும் காஃபின் பொருட்களை அறவே தவிர்த்துவிட்டு, அதற்கு பதிலாக மூலிகை தேனீர் அருந்தலாம். மேலும் தினமும் வெதுவெதுப்பான வெந்நீர் ஒரு டம்ளர் அருந்தலாம்.

தினசரி உணவில் வாழைப்பழம், தர்பூசணி, வெள்ளரி போன்றவற்றை கட்டாயம் சேர்த்துக்கொள்ளவேண்டும். இளநீர் அருந்தினால் இன்னமும் நல்லது.அது அமிலசுரப்பு பிரச்சனையை தீர்க்கும்.

தினமும் ஒரு டம்ளர் பால் அருந்துவதும் நல்லதுதான்.இரவு உணவை நீங்கள் தூங்கப்போவதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே முடித்துவிடுங்கள்.

ஒவ்வொரு உணவு இடைவேளைக்கு இடையேயும் நீண்ட இடைவெளி விடுவதும் அமில பிரச்சனைக்கு மற்றொரு காரணமாக அமைந்துவிடுகிறது.எனவே கொஞ்சமே என்றாலும் அந்தந்த நேரத்தில் உணவை எடுத்துக்கொள்ளுங்கள்.

ஊறுகாய், கார சட்னி வகைகள், வினிகர் போன்றவற்றை கண்ணால் பார்க்காமல் இருப்பதே உசிதம்.

Previous articleகாலை எழுந்தவுடன் செய்யக் கூடாத சில விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்!
Next articleஇதைப் படித்தால் திருமணம் செய்வதற்கு நிச்சயம் யோசிப்பீங்க!