அக்டோபர் 23 முதல் பல்வேறு வகையில் இருந்த கஷ்டங்கள் நீங்கி நிம்மதி பெருமூச்சு விடப்போகும் ராசிக்காரர்கள்!

0

அக்டோபர் 23 முதல் பல்வேறு வகையில் இருந்த கஷ்டங்கள் நீங்கி நிம்மதி பெருமூச்சு விடப்போகும் ராசிக்காரர்கள்!

சனி பகவான் அக்டோபர் 23ம் தேதி மகர ராசியில் வக்ர நிலை முடிவடைந்து அவர் மீண்டும் பழைய நிலையில் மகர ராசியில் நேர்கதியில் பயணிக்க உள்ளார்.

சனி பகவானின் இந்த அமைப்பால் சில ராசியினருக்கு பல்வேறு வகையில் இருந்த கஷ்டங்கள் நீங்கி நிம்மதி பெருமூச்சு விடலாம்.

மேஷம்
சனி பகவானின் தாக்கத்தால் மேஷ ராசிக்கு வர வேண்டிய பணம் வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மின்சாதனப் பொருட்கள், வாகனத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கும் இந்த நேரம் நல்ல தொழில் முன்னேற்றம் தருவதாக அமையும். ஆடை வியாபாரத்திலும் லாபம் உண்டாகும்.

சிம்மம்
ராசிக்கு சனியின் அமைப்பானது நன்மைகள் தருவதாக இருக்கும். பணவரவு சிறக்கும். தடைப்பட்ட வேலைகள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறும்.

ஏதேனும் புதிய வாய்ப்புகள் கிடைத்தல், புதிய வழியில் பணம் வருதல் என இருக்கும். அதன் மூலம் வருமானம் அதிகரிக்கும்.வேலை தேடுவோருக்கு நல்ல வேலை வாய்ப்பைப் பெறலாம்.

துலாம்
உங்கள் தகுதிக்கேற்ப பொன்னான வாய்ப்புகள் அமையும். ராசிக்கு 4ம் வீட்டில் சஞ்சாரம் செய்யும் சனி பகவானால் திடீர் வருமான வாய்ப்புகள் உண்டாகும்.

விருச்சிகம்
சொத்து சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். உங்கள் வருமானம் அதிகரித்து மகிழ்ச்சியை அடைவீர்கள். சகோதர சகோதரிகளிடமிருந்து அனைத்துவிதமான ஆதரவு கிடைக்கும்.

உங்கள் பயணங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கடினமான உழைப்பால் வியாபாரத்தில் மேன்மை பெறுவீர்கள்.

மீனம்
மீன ராசிக்கு சனி பகவானின் அமைப்பால், எதிலும் மிகவும் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். பல பொன்னான வாய்ப்புகளைப் பெறலாம் இந்த நேரத்தில் நீங்கள் புனித யாத்திரை செல்வதற்கான திட்டத்தையும் செய்யலாம்.

இதுவரை வியாபாரத்தில் நஷ்டத்தை சந்தித்து வந்தவர்களுக்கு சனியின் அமைப்பால் நல்ல காலம் தொடங்கும். மன உளைச்சலில் இருந்து விடுபடுவீர்கள், வீட்டில் நிலவும் பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். தொழில், வியாபாரம் இரண்டிலும் வெற்றி பெறுவீர்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகோவிலில் பிரசாதமாக கிடைக்கும் எலுமிச்சையை கொண்டு இப்படி செய்தால் அதிஸ்டம் கிடைக்கும்!
Next articleபுரட்டாசியில் அசைவம் சாப்பிட கூடாது என்பதற்கான காரணம் என்ன‌?