அக்குளில் வரும் வலிமிக்க கட்டிகளைப் போக்கணுமா? இதோ சில எளிய இயற்கை வழி !

0

நம் உடலில் அவ்வப்போது ஆங்காங்கு வலிமிக்க சிறு கட்டிகள் வருவதுண்டு. அதிலும் சிலருக்கு அக்குளில் கட்டிகள் வரும்.

இப்படி அக்குளில் வரும் வலிமிக்க கட்டிகள் பல காரணங்களால் வருவதுண்டு.

குறிப்பாக அதில் அக்குள் கட்டிகள் வர முக்கிய காரணமாக ஷேவிங் அல்லது ஆண்டிபெர்ஸ்பிரண்ட் பயன்பாடு காரணமாக நீர்க்கட்டி, தொற்று அல்லது எரிச்சல் காரணமாக ஏற்படுகின்றது.

அந்தவகையில் வலிமிக்க கட்டிகளைப் போக்க உதவும் சில எளிய இயற்கை வழி சிலவற்றை தற்போது இங்கு பார்ப்போம்.

கெட்டியான காட்டன் துணியை சுடுநீரில் நனைத்து பிழிந்து, அந்த துணியைக் கொண்டு வலிமிக்க கட்டிகள் உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

அக்குள் பகுதியில் மென்மையாக மசாஜ் செய்வது தான். அதுவும் ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யுங்கள். இதனால் அக்குள் பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரித்து, கட்டிகளின் வீக்கம் குறையும்.

அக்குளில் கட்டிகள் வந்தால், தினமும் காலையில் தர்பூசணி ஜூஸைக் குடியுங்கள். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, கட்டிகளும் போய்விடும்.

எலுமிச்சை ஜூஸ். இதில் வைட்டமின் சி அதிகம் நிறைந்திருப்பதோடு, அழற்சி எதிர்ப்பு பண்புகளும் நிறைந்துள்ளதால், இது வலியுடனான கட்டிகளின் வீக்கத்தைக் குறைத்து, சரிசெய்ய உதவுகின்றது.

வெங்காய சாற்றினை அக்குளில் தினமும் இரண்டு முறை தடவ வேண்டும். இதனால் விரைவில் அக்குளில் உள்ள கட்டிகள் போய்விடும்.

உங்களுக்கு அடிக்கடி அக்குளில் கட்டிகள் வருமானால், பூண்டு பற்களை வாயில் போட்டு மென்று ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரைக் குடியுங்கள்.

ஒரு டம்ளர் சுடுநீரில் 1/2 டீஸ்பூன் ஜாதிக்காய் பொடி மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, தினமும் குடிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு ஒருமுறை குடித்தால், அக்குள் கட்டிகள் விரைவில் மறைந்துவிடும்.

மஞ்சள் தூளை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, கட்டிகளின் மீது தடவி 10-15 நிமிடம் நன்கு காய வைத்து, பின் கழுவ வேண்டும். , அக்குளில் உள்ள கட்டிகள் மறையலாம்.

பால், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். ஒருவேளை அப்படியிருந்தும் வைட்டமின் ஈ கிடைக்காவிட்டால், வைட்டமின் ஈ கேப்ஸ்யூலை எடுக்க வேண்டும்.

வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளான பப்பாளி, கேரட் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகுணப்படுத்த முடியாத அரிவாள் செல் நோய் ! ஆட்டிப்படைக்கும் இந்த நோயைப் பற்றி கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க !
Next articleகாப்பாற்றபட்டார் சாண்டி யாரும் எதிர்பாராத விதமாக பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய தர்ஷன்! வெளியான அதிர்ச்சி தகவல் !