ஆண்மைக் குறைபாடுகள் அதிசயிக்கத்தக்க வகையில் தீர்ந்துவிடும் அற்புத மூலிகை இதுதான்! எங்க பார்த்தாலும் விட்றாதீங்க!

0
6316

மூலிகைகள் என்பது பெரும்பாலும் செடிகளாகவே இருக்கின்றன. அதனுடைய பூக்கள், கனிகள், விதை, தண்டு, இலை, வேர் என அத்தனையும் மருந்தாகப் பயன்படுகிறது. அவை நம்மை நலமுடன் வைத்திருக்கிறது.

அதில் மிக முக்கியமான ஒன்றுதான் நீர்முள்ளிச்செடி. அதிலும் இரத்த சோகையால், உடல் இளைத்து, முகம் வற்றி, ஒடுங்கிய கண்களுடன் சோர்ந்து காணப்படும் சிறுமியர், பெண்கள் புதுப்பொலிவு பெற இந்த நீர்முள்ளி பயன்படுகிறது. கண்ட க்ரீமையும் பயன்படுத்தாமல் இதுபோன்ற இயற்கை மூலிகைகளைப் பயன்படுத்தலாமே.

நீர்முள்ளிச் செடி!
வாய்க்கால், சிற்றோடை போன்ற நீர்நிறைந்த இடங்களில் தானேவளரும் வல்லாரை, ஆரை போன்ற மூலிகைகள் எல்லாம் தனிச்சிறப்புமிக்கவை, அதைப்போல நீர்நிலைகளின் கரைகளில் வளரும் மற்றொரு அதிசய மூலிகைதான், நீர்முள்ளி. சாதாரண செடிபோல நீண்டு காணப்படும் நீர்முள்ளிச்செடி, குறுகலான வடிவம் கொண்ட இலைகளுடன், கருஞ்சிவப்பு வண்ண மலர்களுடன், தண்டுகளில் கூரான முட்களுடன் காணப்படும்.

மருத்துவப் பயன்கள்!
நீர்முள்ளிச்செடியின் விதைகளே, பெரும்பாலான உடல்நல பாதிப்புகளுக்கு, சிறந்த தீர்வு தருபவையாகத் திகழ்கின்றன. வறண்ட உடலுக்கு நீர்ச்சத்தை அளித்து, உடலில் தேங்கிய நச்சுநீரை, வெளியேற்றி, உடல்நலத்தைக் காக்கவல்லது, உடலுக்கு நன்மைகள் தரும் வைட்டமின் E,அயன், புரதம் மற்றும் தனிமங்கள் நிறைந்த நீர்முள்ளி விதைகள், பெண்களின் பெரும்பாதிப்பாக விளங்கும் இரத்தச்சோகை, ஆண்களின் ஆண்மைக்குறைபாடு இவற்றைக்களையும், அதிக உடல்எடையால் பாதிக்கப்பட்டவர்களின் துயரம் களைந்து, எடையைக் குறைக்க வைக்கும், இரத்தத்தை சுத்தம் செய்யும், கட்டிகளைக் கரைக்கும், அல்சர் எனும் வயிற்றுப் ண்ணை சரியாக்கும். மூட்டு வலியை குணமாக்கும், எலும்பு தசைகளை உறுதியாக்கி, உடலை வலுவாக்கும். c, கண் எரிச்சல், நீர்க்குத்தல் போன்ற சூட்டால் ஏற்படக்கூடிய உடல்நல பாதிப்புகளை குணமாக்கும்.

பெண்களின் இரத்தச் சோகை போக்கி, புதுப்பொலிவு தரும் நீர்முள்ளி.

ரத்தசோகை!
சில சிறுமியர் மற்றும் இளம்பெண்கள், வயதுக்கு ஏற்ற வளர்ச்சி இன்றி, நரங்கிப் போய் காணப்படுவார்கள், முகம் வற்றி ஒட்டிப்போய் உடல் வெளுத்து, கைகள் எலும்பும் தோலுமாக, அன்றாட வேலைகளில் ஈடுபாடின்றி, மிகவும் சோர்வாகக் காணப்படுவார்கள். சுவாச பாதிப்பு ஏற்பட்டு, மூச்சு விடுதலில் சிரமமும் உண்டாகும். பெண்களுக்கு வேதனைதரும் இந்த நிலை, பெரும்பாலும் இரத்த சோகை பாதிப்பால் ஏற்படுகிறது.

ஹீமோகுளோபின்!
உண்ணும் உணவில் இரும்புச்சத்து குறைபாடு காரணமாக, இரத்தத்தில் ஹீமோகுளோபின் சிவப்பு அணுக்கள் குறைந்து, அதனால், உடலுக்கு பிராணவாயுவை கொண்டுசெல்லும் சிவப்பணுகளின் இயக்கம் பாதித்து, உடல் வளர்ச்சி, உடல் ஆற்றல் குன்றி, உடல்நலம் கெடுகிறது. மாதவிலக்கில் ஏற்படும் அதிக உதிரப்போக்கு, பிரசவம், அறுவை சிகிச்சையில் வெளியேறும் அதிக இரத்தம் இவற்றின் காரணமாகவும், பெண்களுக்கு இரத்த சோகை ஏற்படலாம்.

இரத்தத்தில் ஆணுக்கு 13.5 என்ற குறைந்தபட்ச அளவிலும், பெண்ணுக்கு 12 என்ற குறைந்தபட்ச அளவிலும் ஹீமோகுளோபின் இருக்கவேண்டும், இந்த அளவு குறையும்போது, பாதிப்பு ஏற்படுகிறது.

தீர்வு!
உணவில் இரும்புச்சத்து மிகுந்த, அகத்திக்கீரை, முருங்கைக்கீரை, அரைக்கீரை, சுண்டை மற்றும் பாகற்காய் சேர்த்துவர வேண்டும். மாதுளை, சீதா போன்ற பழங்கள், அத்திப் பழம், உலர் திராட்சை, பேரீச்சை இவற்றுடன் வேர்க்கடலை உருண்டை, பனங்கற்கண்டு போன்றவையும் சாப்பிடலாம். கம்பு, கேழ்வரகு, சாமை, கோதுமை போன்ற தானியங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துவரவேண்டும். இதன் மூலம், இரத்த சோகையை விரட்ட முடியும். எனினும், கடுமையான இரத்த சோகையால், மயக்கம், செயல்களில் தடுமாற்றம் போன்ற நிலைகளில் இருப்பவர்கள், பக்க விளைவுகள் இல்லாத, இயற்கை நிவாரணமாக நீர்முள்ளி மூலிகையைப் பயன்படுத்த, விரைவில் நலம் பெறலாம்.

நீர்முள்ளி குடிநீர்!
இரத்த சோகையால் அவதிப்பட்டு வரும் பெண்கள், நீர்முள்ளி விதைகளை நீரில் இட்டு, அதை நன்கு காய்ச்சி, ஆறவைத்து நாற்பத்தெட்டு நாட்கள் தினமும் இருவேளை ஒரு டம்ளர் அளவு பருகி வரவேண்டும். இதன் மூலம், உடலில் சிவப்பணுக்கள் அதிகரித்து, உடலில் ஏற்பட்ட பாதிப்புகள் மெல்ல விலகி, உடலில் நீர்ச்சத்து இயல்பாகி, உடல் வனப்பாகும். முகத்தில் பொலிவு உண்டாகும். கை கால்களில் காணப்பட்ட சுருக்கங்கள் மறைந்து, சதைப்பற்றுடன் காணப்படும். கண்களில் புத்தொளி தோன்றி, காண்பவர்கள் வியக்கும் வண்ணம் உடல்நலம் தேறும்.

எடையைக் குறைக்கும் நீர்முள்ளி!
அதிக உடல் எடை என்பது, உட்கார்ந்து எழும்போதும், நடக்கும்போதும் ஏற்படக்கூடிய உடல் பாதிப்பு மட்டுமல்ல. அது மன ரீதியிலும், அழுத்தத்தை ஏற்படுத்தி, அவர்களை இயங்கவிடாமல் முடக்கி, தனிமைப் படுத்திவிடுகிறது.

உடல் எடையைக் குறைக்க பெரும்பாலானோர் செய்யும் மிகப்பெரிய தவறு, பட்டினி கிடப்பது மற்றும் உணவைக் குறைத்து சாப்பிடுவதாகும், இதன்மூலம் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல், உடல் நலம் குன்றி, சோர்ந்து விடுகின்றனர்.

எடை அதிகரிக்கக் காரணங்கள்!
அதிக கொழுப்புச்சத்து மிகுந்த உணவுகளை உண்பது, ஊசிபோட்டு வளர்க்கப்படும் கோழி போன்ற இறைச்சிகளை உண்பது, இடைவிடாத நொறுக்குத் தீனி, எப்போதும் பருகும் குளிர்பானங்கள் மற்றும் ஐஸ்க்ரீம் இவற்றாலும், பரம்பரை பாதிப்புகளாலும், சிலருக்கு உடல் எடை கூடிவிடுகிறது. அறுவைசிகிச்சை, தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் ஆண்டிபயாடிக், வைட்டமின்கள் போன்ற மேலைமருந்துகளின் பக்க விளைவுகளாலும், உடல் எடை கூடும்.

இதனால், உடலில் சேரும் நச்சுக் கொழுப்புகள் வெளியேற வழியின்றி, உடலில் தேங்கி, அதன் மூலம் நச்சு நீர் உண்டாகி, உடலின் எடை அதிகரித்து விடுகிறது.

மற்ற பயன்பாடுகள்!
நீர்முள்ளி விதைகளோடு அதன் இலைகள் உள்ளிட்ட சமூலம் எனும் முழு செடியும் மிக்க நன்மைகள் செய்யவல்லவை. நீர்முள்ளி குடிநீர், மூட்டுவலி, உடல் உள் இரணம் போன்றவற்றைக் குணப்படுத்தும். மோரில் கலந்து பருக, வயிற்றுப் போக்கைக் குணப்படுத்தும். நீர்முள்ளி விதைகளில் இருந்து எண்ணை எடுத்து, அதை உடல் வீக்கம் மற்றும் கட்டிகளைக் கரைக்கப் பயன்படுத்துகிறார்கள். இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, உடல் வியாதி எதிர்ப்புத் தன்மைகளை அதிகரிக்கும்.

ஆண்மை பெருக்கும்!
தாய்ப்பாலை அதிகமாக சுரக்கவைக்கும் மருந்துகள், சோர்வு நீக்கி, உடலுக்கு ஆற்றல் தரும் மருந்துகள், ஆண்மையிழப்பை சரிசெய்யும் மருந்துகள் போன்றவற்றில் பிரதானமாக, நீர்முள்ளி விதைகள் சேர்க்கப்படுகின்றன.

அமுக்குரா, ஓரிதழ் தாமரை, நீர்முள்ளி, பூனைக்காலி, ஜாதிக்காய் மற்றும் தண்ணீர்விட்டான் கிழங்கு போன்றவற்றை ஒன்றாக சூரணமாக்கி, தேனில் குழைத்து, தினமும் சாப்பிட்டுவர, ஆண்மைக் குறைபாடுகள் அதிசயிக்கத்தக்க வகையில் தீர்ந்துவிடும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: