ஹாங்காங்கை சீனாவுடன் இணைக்க சீனா செய்துள்ள வியக்கவைக்கும் செயல்!

0
285

ஹாங்காங்கை சீனாவுடன் இணைக்க தரை மற்றும் கடலுக்கு அடியில் சீனா பாலம் கட்டி உள்ளது.

பீஜிங், ஹாங்காங்கில் தனது ஆதிக்கத்தை வலுவாக்கி கொள்வதற்காக தென்சீன நகரங்களான சுகாய், மேகாவ் ஆகியவற்றையும் ஹாங்காங்கையும் இணைக்கும் பாலத்தை சீனா கட்டி முடித்துள்ளது.

சீனாவின், ஹாங்காங், மேகாவ், சுகாய் ஆகிய நகரங்களை இணைக்கும் விதத்தில் கடல் மீது 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு தரை மற்றும் கடலுக்கு அடியில் சுரங்கப் பாலம் என இரு விதமாக பாலத்தை சீனா கட்டி உள்ளது.

இதற்காக, கடல் நடுவில், 3 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில், பாறைகள் மற்றும் மண்ணால் நிரப்பப்பட்டு, இரண்டு தீவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

சுமார் 6,720 கோடி ரூபாய் செலவில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ள நிலையில், 50 கிலோ மீட்டர் நீள பாலத்தில், 6 கிலோ மீட்டர் தூரம் கடலுக்கு அடியில் சுரங்கம் அமைத்து உருவாக்கப்பட்டுள்ளது

இதன் திறப்பு விழா குறித்து ஏதும் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் இந்தப் பாலத்தை 120 ஆண்டுகளுக்குப் பயன்படுத்த முடியும் என சீனா கூறியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகென்யாவில் ஏற்பட்டுள்ள திடீர் பிளவு: ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக உடைகிறதா?
Next articleவட மாநில கொள்ளையர்களின் புகலிடமாக மாறிய சென்னை…!