வீட்டில் இருக்கும் ஷவரில் பாக்டீரியாக்கள் வளர்கின்றன என்று சொன்னால் எல்லோருக்கும் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கும்.குளியலறையில் இருக்கும் ஷவர் தலை குணிந்தபடிதான் இருக்கிறது. அதனால் அதன் ஓரத்தில் எப்போதும் சிறிது தண்ணீர் தேங்கி இருக்கும்.
ஒரு இடத்தில் தொடர்ந்து ஈரப்பதம் இருக்கும்போது அங்கு கிருமிகள் உண்டாகும் என்று சொல்ல வேண்டியதே இல்லையே. எனவே, ஷவரில் குளிப்பவராக இருந்தால், ஷவரை திறந்து சில நிமிடங்கள் நீரை வெளியேற்றிவிட்டு பின்னர் குளிக்க ஆரம்பியுங்கள்.
ஷவரை திறந்ததும், முகத்தை நேராக காண்பித்தபடி குளிக்கத் துவங்குபவர்களுக்கு, வாய், மூக்கு வழியாக கிருமிகள் பரவும் ஆபத்து இருப்பதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
நீங்கள் இப்போது தெரிந்து கொண்ட இந்த விஷயத்தை உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறி அவர்களையும் எச்சரியுங்கள். அதுதான் மிகவும் முக்கியமானது.