வேர்க்கடலையில் தயாரிக்கப்படும் எண்ணெய் நல்ல கொழுப்பா! சக்கரை நோயாளிகள் மற்றும் கொலஸ்ரால் உள்ளவர்கள் சாப்பிட முடியுமா?

0
952

வேர்க்கடலையில் உடம்புக்குத் தேவையான கொழுப்பு மற்றும் புரதச் சத்து அதிகமாக காணப்படுவதுடன் அதிலிருந்து உடம்லில் சேரும் சர்க்கரையின் அளவும் மிக மிகக் குறைவாக உள்ளதுடன் வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன்களைத் துரிதப்படுத்தும் தன்மையும் அதிகமாக காணப்படுவதனால் சர்க்கரை வியாதிக்காரர்கள் வேர்க்கடலையை எந்தவிதப் பயமுமின்றித் தாராளமாகச் சாப்பிட முடிவதுடன் இதிலுள்ள வைட்டமின் ஏ நீரில் கரையக் கூடிய வைட்டமின் பி3 போன்றன கர்ப்பிணிகளுக்கு இச்சத்துப் பொருட்களின் குறைபாடு காரணமாக ஏற்படக் கூடிய குழந்தை நரம்புக் கோளாறுகளுடன் பிறப்பதற்கான சாத்தியப்பாடுகளைக் குறைக்கின்றது.

வேர்க்கடலையைச் சாப்பிடுவதன் மூலம் அதிலுள்ள நைட்ரிக் அமிலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து இரத்தம் சீராக இருக்கவும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகின்றதுடன் அதிலுள்ள உயிர் வேதிப் பொருள்கள்; இரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் தேவையற்ற பொருட்களை கல்லீரலுக்குள் தள்ளிவிட்டு அந்தப் பொருட்கள் கழிவாகி வெளியேறுவதற்கு உதவுகின்றது.

மேலும் இதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் உடம்பில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கிவிடும். இவ்வாறாக வேர்க்கடலையைப் பச்சையாகச் அல்லது – எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடுவதை விட அவித்தோ அல்லது வறுத்தோ அதன் தோலை நீக்காமல் சாப்பிடும் போது தான் நிறையச் சத்துகள் கிடைக்கும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: