வேதனை அனுபவித்த இலங்கை யானை கவானை விடுவிக்க உத்தரவு!

0
551

வேதனை அனுபவித்த இலங்கை யானை கவானை விடுவிக்க உத்தரவு!

யானைகள் இல்லாத பாக்கிஸ்தானுக்கு ஒரு வயதுள்ள காவன் என்ற யானைக்குட்டி 1985 ம் ஆண்டு அன்பளிப்பு செய்யப்பட்டது. பின்னர் சஹேலி என்ற பெண் யானை ஒன்றை 1990ம் ஆண்டு காவனுக்கு துணையாக மீண்டும் இலங்கையிலிருந்து அனுப்ப‌பட்டது.

சஹேலி என்ற பெண் யானை அங்குள்ள வெப்பமான (40 பாகை) சூழ்நிலையினை தாங்க முடியாமல் 1912ல் உயிரிழந்தது. அதனால் காவன் தனிமை மற்றும் வெப்பம் ஆகியவற்றினால் பெரிதும் பாதிக்கப்பட்டு விரக்தியடைந்து குழப்பம் செய்ததினால் சங்கிலியால் கட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது.

அமெரிக்காவின் புகழ் பெற்ற பொப் பாடகி செர் கவானை சுதந்திரமாக விடவேண்டி குரல் கொடுத்து வந்தார். இதனால் உச்சநீதிமன்றம் கவானை பாகிஸ்தானில் உள்ள ஒரு சரணாலயத்திற்கு மாற்றும்படி அல்லது இலங்கை அதிகாரிகளை அணுகும்படி உத்தரவிட்டது.

மேலும் இது குறித்து பேசிய அமெரிக்க கலைஞர் செர், விலங்குகளை பராமரிக்க அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிக்கு பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: