வெளியில் கசிந்த ரகசியம்: உயிரை விட்ட இளம் விதவை!

0
359

தமிழ்நாட்டில் தவறான உறவு வைத்திருந்தது ஊர் மக்களுக்கு தெரியவந்ததால், விதவைப் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையை சேர்ந்தவர் முத்துமாரி. மதுவுக்கு அடிமையான கணவன் கண்ணன், அடுத்தடுத்து மூன்று குழந்தைகள் என முத்துமாரி 26 வயதிலேயே மனதளவில் மிகுந்த துயரங்களை சந்தித்துள்ளார்.

அதிகப்படியான மதுப்பழக்கத்தால் கண்ணன் உயிரிழந்து விட மூன்று குழந்தைகளுடன் தனித்து விடப்பட்டார் முத்துமாரி.

குழந்தைகளின் எதிர்காலம், தனக்கென ஒரு பாதுகாப்பு என ஏக்கத்தில் தவித்த முத்துமாரியின் நிலைமையை அவரது உறவினரான முத்துபாண்டி தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ளார்.

ஏற்கனவே திருமணம் ஆன முத்துப்பாண்டி, முத்துமாரியின் குழந்தைகளுக்கு உணவு வாங்கி கொடுப்பது, அரவணைப்புடன் பார்த்துக்கொள்வது என முத்துமாரியை ஈர்த்துள்ளார்.

இதையடுத்து இருவருக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த முத்துமாரியின் தாய், இருவரையும் கண்டித்துள்ளார். இந்த விவகாரம் ஊர் மக்களுக்கு தெரியவந்ததால், அவமானத்தில் இருந்த இருவரும் கடந்த சனிக்கிழமை விஷம் குடித்த நிலையில் முத்துமாரி உயிரிழந்தார்.

முத்துப்பாண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சடலத்தை அடக்கம் செய்வதற்கு கூட பணமில்லாமல் தவித்த முத்துமாரியின் தாய் தவித்த காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: