வெளிநாட்டு பெண்ணுக்கு தமிழர் தலைநகரில் நேர்ந்த விபரீதம்!

0
240

தமிழர் தலைநகரான திருகோணமலையில் ஏற்பட்ட விபத்தில் வெளிநாட்டு பெண்ணொருவர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று மாலை அலஸ்தோட்டம் பகுதியில் இடம்பெற்றுள்ள நிலையில் படுகாயமடைந்த இருவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிலாவெளி பகுதியிலிருந்து திருகோணமலை நகருக்கு வந்து கொண்டிருந்த மோட்டார்சைக்கிளுடன், மற்றுமொரு மோட்டார்சைக்கிள் மோதியதாலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிலொரு மோட்டார்சைக்கிளை அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த இளைஞன் செலுத்தி வந்த நிலையில் பின்னால் அமர்ந்திருந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜெசிக்கா லூசியா (28 வயது) எனும் யுவதியே படுகாயமடைந்துள்ளார்.

இதேவேளை விபத்தில் திருகோணமலை ஜமாலியா பகுதியை சேர்ந்த 30 வயது இளைஞரொருவரும் படுகாயமடைந்துள்ளார்.

மேலும் விபத்து தொடர்பில் இரண்டு மோட்டார்சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: