வெங்காயத்தை நசுக்கி ஒத்தடம் தருவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு ?

0

வெங்காயத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். அதனால் தான் நாம் அன்றாட உணவில் அனைத்திலும் வெங்காயத்தை சேர்க்கிறோம். வெங்காயத்தை உணவில் தவிர்ப்பது, நமது உடல் ஆரோக்கியத்திற்கு நாம் செய்யும் மிகப்பெரிய தீங்கு ஆகும்.

உணவில் சேர்ப்பதால் மட்டுமின்றி, வேறுசில வழிகளிலும் கூட வெங்காயம் நல்ல மருத்துவ பலன்களை அளிக்கிறது. அடிக்கடி அழும் குழந்தைகளின் அழுகையில் இருந்து, காது வலி, நெஞ்சு வலி, வெட்டுக் காயம், காய்ச்சல், முடி வளர என வெங்காயத்தின் மூலம் நாம் நிறைய பலன்களை பெற முடியும்.

பிறந்த குழந்தைகள் அடிக்கடி அழுதுக் கொண்டே இருப்பார்கள். வயிறு வலி, பெருங்குடல் வலி காரணமாக இந்த அழுகை ஏற்படும் என்றும் சிலர் கூறுவதுண்டு. இது, போன்ற நேரத்தில், வெங்காயத்தை நீரில் வேக வைத்து. பிறகு அது ஆரிய பிறகு அதை ஒரு டீஸ்பூன் குழந்தைக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளின் அழுகை நிற்கும்.

நெஞ்சு சளி, அல்லது நெஞ்சில் ஏதேனும் அடைத்தது போன்ற உணர்வு இருந்தால், வெங்காயத்தை நசுக்கி அதனுடன் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து பேஸ்ட் போல செய்து, மார்பில் அப்ளை செய்து மேலே ஒரு துண்டு பரப்பி வைத்தால், சீக்கிரமாக குணமாகும்.

சிறிய வெங்காயத்தை எடுத்துக் கொண்டு அதை சாக்ஸ் அல்லது துணியில் கட்டி, காதில் வைத்துக் கொள்ளுங்கள். அது விழாதபடி துணி அல்லது கேப் அணிந்துக் கொள்ளவும். இவ்வாறு செய்வதால் காது வலி குறையும்.

வெட்டுக் காயம் ஏற்பட்டு இரதம் வழியும் இடத்தில், வெங்காயத்தை வைத்து கட்டலாம். இது இரதம் வழிதலை நிறுத்தவும், சிறந்த ஆண்டிசெப்டிக்காகவும் பயன்படுகிறது.

முதலில் உங்கள் பாதத்தில் தேங்காய் எண்ணெய் தேய்க்கவும். பிறகு உங்கள் அடி பாதத்தின் வளைவு பகுதியில் வெங்காயத்தை வைத்து அதன் மேல் சாக்ஸ் அணிந்துக் கொள்ளுங்கள். ஓர் இரவு முழுக்க இதை விட்டுவிடுங்கள். இது நச்சுக்கள் குறைய பெருமளவு உதவும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதொடையில் உள்ள கொழுப்பை வேகமாக கரைக்க வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க!
Next articleதினமும் 6 வறுத்த பூண்டை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா!