வீட்டில் மாவிலை தோரணம் கட்டுவதற்கான உண்மை காரணம் என்ன தெரியுமா! முன்னோர்கள் கூறிய தகவல்!

0
616

வீட்டில் உள்ளவர்கள் உடல் ஆரோக்கியம் பெறவேண்டும் என்பதற்காக இது போன்ற பழக்கங்களை ஏற்படுத்தி உள்ளனர் நமது முன்னோர்கள். எதற்காக மாவிலைகளை வீட்டில் கட்டுகிறோம் என்றால், வீட்டில் நுழையும் கெட்ட சக்திகளை வெளியேற்றிவிடும் என்பார்கள்..

நூலை மஞ்சளில் தோய்த்து எடுத்து, மாவிலைகளை ஒரே அளவு உள்ளதாக எடுத்துக் கொள்ளவேண்டும். பிறகு அதனை சுத்தம் செய்து துடைத்து, அதில் மஞ்சள் தடவி குங்குமம் வைத்து நன்கு காயவைத்து கட்டவேண்டும். இதனுடன் சேர்த்து வேப்பிலைகளையும் சேர்த்து கட்ட வேண்டும். இதனை ஒரு பக்கங்களில் மட்டும் கட்டினால் போதுமானது.

நிலவாசற்படியில் இந்த மாவிலை தோரணத்தை விஷேச நாள்களிலும், பண்டிகையின் போதும் கண்டிப்பாக அனைத்து வீடுகளிலும் கட்டுவதை வழக்கத்தில் வைத்துள்ளோம். மாவிலைகளுக்கு ஒரு சிறப்பு தன்மை உண்டு. அவை மரத்தில் இருந்து பறித்த பிறகும் கரியமில வாயுவை எடுத்து கொண்டு ஆக்ஸிஜனை வெளிவிடும் தன்மை கொண்டது.

மா இலைகள் ஒரு கிருமி நாசியாகவும் உள்ளது. நம் வீட்டில் உள்ள வாஸ்து குறைபாட்டையும் நீக்க வல்லது. இதற்கு 11 அல்லது 21, 101, 1001 மாவிலைகளை தோரணமாக கட்டுவது நல்லது.

ஏன் மா இலைகள்
வேம்பு, அரசமரம் ஆகியவற்றுக்கும் ஆன்மீகத்துக்கும் நிறைய தொடர்புகள் இருந்தாலும் கூட முக்கிய நாட்களில் வீட்டின் வாயிலில் நாம் குறிப்பாக மா மரத்தின் இலைகளைத் தோரணமாகக் கட்டுவதற்கான காரணம் என்ன என்று எப்போதாவது யோசித்திருக்கிறோமா? இல்லவே இல்லை. அது ஏனென்றால் இந்து மதத்தைப் பொருத்தவரையில் மா மரம் என்பது புனிதமான மரமாகக் கருதப்படுகிறது.

கலசங்கள்
நீங்கள் நன்கு கவனித்தால் தெரியும். கோவில்களிலோ வீட்டிலோ பூஜையின் போது கலசங்களில் சுற்றுலும் 5 மா இலைகளைச் சொருகி வைப்பார்கள். அதில் மஞ்சள் மற்றும் குங்குமத்தைத் தெளிப்பார்கள். இந்து மதத்தில் இது மிக முக்கிய சடங்காகப் பார்க்கப்படுகிறது.

என்ன காரணம்?
மாவிலைகள் மிகவும் புனிதமான பொருளாக நம்பப்படுகிறது. அதேபோல் நம்முடைய வீட்டில் உள்ள நெகட்டிவ் எனர்ஜியையும் வெளியேற்றிவிடும். வெளியிலிருந்து வீட்டுக்குள் விடாது என்ற நம்பிக்கையும் உண்டு. அதோடு இது பாசிடிவ் பாக்டீரியாக்களை உற்பத்தி செய்கிற ஆற்றல் கொண்டதால் தீமை விளைவிளைவிக்கும் பாக்டீரியாக்களில் இருந்து பாதுகாக்கிற ஆண்டி பாக்டீரியலாகப் பயன்படுகிறது.

Previous articleநடுரோட்டில் திடீரென்று தோன்றிய உருவம்! கடும் அதிர்ச்சியில் அலறியடித்து தலைதெறிக்க ஓடும் மக்கள்!
Next articleநடுரோட்டில் பிரிச்சு மேயும் இளம் பெண்கள்! வாய் பிளந்து பார்க்கும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள்!