வீட்டில் தனியாக இருந்த பெண்! மர்ம நபர்கள் செய்த கொடூரச் செயல்!

0
312

கும்பகோணம் அருகே வீட்டில் தனியாக உறங்கிய பெண்ணை மர்ம நபர்கள் சிலர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் அவரது மனைவி வசந்தி அவர்களுக்கு சந்தியா என்னும் பெண் குழந்தை ஒன்று உள்ளது. பாண்டியன் கோவையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் பணிபுரிந்து வருகிறார். பாண்டியன் கோவையில் தங்கி வேலை பார்ப்பதால் வாரம் ஒரு முறை தான் வீட்டிற்கு வருவார். இந்நிலையில் வசந்திக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

வசந்தி பல நாட்களாக அவருடன் பேசாமல் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று இரவு சந்தியா அருகில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். வசந்தி மட்டுமே வீட்டில் தனியாக இருந்துள்ளார். வசந்தி மட்டுமே வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் கூரையை பிரித்து உள்ளே இறங்கி வசந்தியை தாக்கியுள்ளனர். இரவு நேரம் என்பதால் வசந்தி கத்தியது யாருக்கும் கேட்கவில்லை. மர்ம நபர்கள் வசந்தியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர். அதிகாலை 6 மணியளவில் சந்தியா தன் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது வீட்டின் முன் கதவு பூட்டி கிடந்த நிலையில் கதவை தட்டிப் பார்த்தும் திறக்காத நிலையில் அருகில் உள்ளவர்களிடம் சந்தியா தெரிவித்துள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் வந்து கதவை தட்டிய போது கதவு திறக்கப்படவில்லை. இந்நிலையில் அருகில் உள்ள ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தபோது வசந்தி கத்திக்குத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ந்தனர்.

உடனே அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர் சம்பவத்தை அறிந்து உடனே விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே இருந்த வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அருகில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது வசந்திக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இன்னொருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளதாகவும் அவர்தான் இந்த செயலை செய்து இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிப்பலன் – 19.06.2019 புதன்கிழமை !
Next articleடிக் டோக்கில் சாகசம்! கழுத்து எலும்பு முறிந்து வாழ்க்கையை இழந்த 19 வயது இளைஞர்!