வியக்க வைக்கும் பிரமாண்ட காணொளி! பிரம்மாண்டமாக இத்தாலியில் நடந்த முகேஷ் அம்பானி மகள் நிச்சயதார்த்தம்!

0
267

நாட்டின் மிகபெரிய செல்வந்தரும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபருமான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி, முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரமோல் நிறுவன அதிபர் மகனை திருமணம் செய்யவுள்ளார்.

இவர்களது நிச்சயதார்த்தம் இத்தாலியில் இரண்டு நாட்களுக்கு முன் மிக பிரமாண்டமாக நடந்தது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அதிபரான முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி (வயது26). இவர் அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்துள்ளார். ஆகாஷ் அம்பானிக்கும், ரோஸி புளூ டைமண்ட்ஸ் அதிபர் ருஷெல் மேத்தா, மோனா மேத்தா தம்பதியின் 3வது மகள் ஸ்லோகா மேத்தாவுக்கும் இடையே காதல் இருந்து வந்ததாக தகவல்கள் வெளியாகின.

இருவரின் பள்ளிக் காலத்தில் இருந்தே இரு குடும்பத்தாருக்கும் நன்கு பழக்கம் என்பதால் இருவருக்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களது திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திருமணம் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது.

இஷா அம்பானி
இதனைதொடர்ந்து, முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி, பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரேமோல் ரியாலிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்த் பிரமோலை காதலித்து வருகிறார்.

நெருங்கிய நண்பர்களான இவர்கள் இருவரும் அண்மைக் காலமாக காதலித்து வருவதாகவும், இவர்களது காதலுக்கு இரண்டு தரப்பு பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

நிச்சயதார்த்தம்
இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமோலின் நிச்சயதார்த்தம் இத்தாலியில் உள்ள lake como என்ற இடத்தில் நடைபெற்றது. இதில் மகளை அம்பானி அழகாக கைக்கோர்த்து அழைத்து வந்து ஆனந்த் கரங்களில் கொடுக்கிறார்.

திரை பிரபலங்கள்
இதில் பாலிவுட்டின் முன்னனி நடிகரான சோனம் கபூர், அவரது கணவர் ஆனந்த், பிரியங்கா சோப்ரா அவரது காதலன், கரண் ஜோஹர், அமிர் கான் அவரது மனைவி, குஷி கபூர், ஜானவி கபூர், மனிஷ் மல்கோத்ரா, அனில் கபூர் போன்றவர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.

அலங்காரங்கள்
அம்பானி தன் மகளுக்காக மிகவும் பிரம்மாண்டமாக செலவு செய்து அலங்காரங்களை செய்துள்ளார். வானவேடிக்கை, பூ அலங்காரம் போன்றவை காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: