வார நாட்களில் அதிகாலையில் எழுந்து பள்ளிக்கும், பணிக்கும் ஓடும் நபர்கள், வார விடுமுறை நாளில் மட்டும் அதிக நேரம் தூங்குவார்கள்.
ஆனால் பல பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் வார விடுமுறை நாட்களில் அதிக நேரம் தூங்குவதை விரும்புவதில்லை. நாளைக்கும் இந்த பழக்கமே வரும். சீக்கிரம் எழுந்திருக்க முடியாமல் போகும் என்று கூறி அவர்களை எழுப்பி விடுவார்கள்.
ஆனால் ஹாங்காங்கில் உள்ள சீனப் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில், வார விடுமுறை நாட்களில் கூடுதல் நேரம் தூங்குபவர்கள் உடல் பருபன் பிரச்சினையில் இருந்து விடுபடுகிறார்கள்.
மேலும் அவர்கள் புத்துணர்ச்சி பெறவும் இந்த விடுமுறை தூக்கம் உதவுகிறது என்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் வார நாட்களில் நல்ல உற்சாகத்துடன் இருக்கிறார்கள் என்கிறது இந்த ஆய்வு.
இனி உங்கள் குழந்தைகளின் விடுமுறை நாள் தூக்கத்திற்கு அனுமதி அளிப்பதில் தடையேதும் இல்லை.