வாழ்க்கையில் கடந்து வந்த சோகமான பாதைகள்! பிக்பாஸ் ரித்விகாவா இது?

0
404

நடிகை ரித்விகா மெட்ராஸ், கபாலி படங்களில் நடித்ததன் மூலம், தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமானவர்.

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் போட்டியாளாராக பங்கேற்று வெற்றிப் பெற்று ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

இவரின் சிறுவயது புகைப்படம் ஒன்றை சமூகவலைத்தளங்களில் அவரின் ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் அறிமுகமாகி, வடமாநிலங்களில் பிரபலமான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை கடந்த ஆண்டு முதன்முறையாக, விஜய் டி.வி தமிழில் அறிமுகப்படுத்தியது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில், போட்டியாளர்களுக்கு மத்தியில் நிலவிய சண்டைகளும், சர்ச்சைகளும் நிகழ்ச்சியை மேலும் பிரபலமடையச் செய்தது.

சுமார் 100 நாட்களுக்கு மேல் நடைபெற்ற இந்த போட்டியில், இறுதியில் ரித்விகா வெற்றிவாகை சூடினார்.

தமிழில் ஒருசில படங்களில் மட்டுமே நடித்துள்ள ரித்விகா, தனது எளிமையான, யதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் விரைவில் இடம்பிடித்து விட்டார்.

மெட்ராஸ் படத்தில் அன்பின் மனைவியாக நடித்து அனைவரையும் கவர்ந்த இவருக்கு, அதன்பின் ஏராளமான பட வாய்ப்புகள் வந்தன.

ஆனால் சிறிய கதாபாத்திரம் என்றாலும், ஆழமான கதாபாத்திரத்திலேயே நடிக்க விரும்பிய ரித்விகா, பார்த்து பார்த்து தனது கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார்.

கபாலி, ஒருநாள் கூத்து படங்களில் இவரது கதாபாத்திரங்கள் அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் மிகுந்த வரவேற்பை பெற்றன.

இப்படி ஓரிரு படங்களிலேயே நடித்து ரசிகர்களிடையே வெற்றி பெற்ற நடிகை ரித்விகா, தற்போது பிக்பாஸ் 2 நிகழ்ச்சியிலும் வெற்றி வாகைச் சூடியுள்ளார்.

மேலும், ஒரு சந்தரப்பத்தில் படவாய்ப்பு குறைந்த நிலையில் ‘டார்ச்லைட்’ படத்தில் ரித்விகா விலைமாது வேடத்தில் நடித்துள்ளார். சினிமாவில் சற்று சறுக்கிய நிலையில் இருந்த அவருக்கு பிக்பாஸ் 2 மீண்டும் சிறந்த இடத்தை பெற்றுக் கொடுத்துள்ளது.

இதேவேளை, அவருக்கு என்று தமிழ் ரசிகர்கள் அதிகரித்துள்ள நிலையில் அவரின் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: