வாய் துற்நாற்றம், ஈறுகளில் உண்டாகும் புண்களுக்கு ஏலக்காய் நீர் என சில இயற்கை வழிகள்!

0

வாய் துற்நாற்றம், ஈறுகளில் உண்டாகும் புண்களுக்கு ஏலக்காய் நீர் என சில இயற்கை வழிகள்.

பற்களில் உண்டாகும் பிரச்சனைகளை போக்க வருடத்தில் ஒருமுறையாவது நீங்கள் பல் மருத்துவரை சந்திக்க வேண்டியது அவசியமாகும். இதனால் பற்களில் உள்ள கோளாறுகளை சரி செய்து கொண்டு ஆரோக்கியமாக வாழலாம். மேலும் சில வகையான இயற்கையான பொருட்களை சாப்பிடுவதன் மூலமாகவும், சில இயற்கை பொருட்களை கொண்டும் உங்களது பற்களில் உண்டாகும் பிரச்சனைகளை சரி செய்யலாம். இந்த பகுதியில் பற்களில் உண்டாகும் பல விதமான பிரச்சனைகளை எப்படி சரி செய்வது என்பது பற்றி காணலாம்.

ஏலக்காயை போட்டு கொதிக்க வைத்த நீரில் வாய் கொப்பளித்தால் உங்களது வாய் துற்நாற்றம், ஈறுகளில் உண்டாகும் புண்கள் போன்றவை நீங்கும். இதனால் உங்களது சிரிப்பு முத்துக்களில் இருந்து வெளிப்படும் வெளிச்சம் போல இருக்கும்.

பெப்பர் மிண்ட் ஆயில் கடுமையாக உள்ள ஈறு பிரச்சனைகளை கூட தீர்த்து வைக்க வல்லது. இது தீங்கு விளைவிக்க கூடிய பாக்டீரியாக்களை அழிக்கும் திறன் கொண்டது. இந்த பெப்பர் மிண்ட் ஆயில் நல்ல வாசனை உடையது எனவே இது உங்களது வாய் துர்நாற்றத்தையும் போக்க கூடியது.

சில துளிகள் பெப்பர் மிண்ட் ஆயிலை எடுத்து ஈறுகளில் தடவினால், ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.

இலவங்கப்பட்டை பொடியில் அதிகளவு ஆன்டி-பாக்டீரியல் தன்மை உள்ளது. இது பற்களில் உண்டாகும் கரைகளை போக்க கூடியது. மேலும் இது பற்களில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்து விடுவதால், உங்களுக்கு சொத்தை பல் பிரச்சனை இருக்காது. மேலும் இது உங்களது சுவாசத்தையும் சுத்தமாக்குகிறது.

இலவங்கப்பட்டையின் பொடியை சிறதளவு எடுத்துக் கொண்டு அதனை தண்ணீரில் கலந்து பேஸ்ட் போல செய்து ஈறுகளின் மீது தடவி 2 நிமிடங்கள் கழித்து அதனை கழுவி விட வேண்டும்.

பால் பொருட்களில் அதிகளவு கால்சியம் சத்து உள்ளது. இது எலும்புகளுக்கு மிகவும் நல்லது. கால்சியம் உங்களது ஈறுகளுக்கு இடையே உள்ள இடைவெளிகளை நீக்க கூடியது. மேலும் இது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடை செய்கிறது. தினமும் பால் மற்றும் சீஸ் போன்ற பால் பொருட்களை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஆயில் புல்லிங் என்பது ஒரு பழங்கால மருத்துவ முறையாகும். இந்த ஆயில் புல்லிங் செய்வதால் உங்களுக்கு பல்வேறு நன்மைகள் உண்டாகின்றன. இந்த ஆயில் புல்லிங் செய்யும் போது வாயில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் அழிகின்றன. உங்களது ஈறுகளில் உள்ள பிரச்சனைகளை போக்க இது உதவுகிறது.

அரை டீஸ்பூன் அளவு சிசேம் ஆயில், தேங்காய் எண்ணெய், சில துளிகள் டீ ட்ரீ ஆயில் ஆகியவற்றை ஒன்றாக கலந்து 10 நிமிடங்கள் நன்றாக வாய்கொப்பளித்து துப்பி விட வேண்டும். இதனை தினமும் காலையில் பல்துலக்குவதற்கு முன்பாக செய்ய வேண்டும்.

கேரட்டை நீங்கள் பச்சையாக சாப்பிடுவது உங்களது வாய் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் மிகச்சிறந்த தீர்வாக அமையும். கேரட்டை பச்சையாக சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைகின்றன. கேரட் உங்கள் வாய்துற்நாற்றம், பற்களில் சொத்தை விழுதல், பற்களில் இரத்தம் வடிதல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. மேலும் கேரடை மென்று சாப்பிடுவதால் உங்களது இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.

அன்னாசி பழமும் கூட பற்கள் பிரச்சனைக்கு மிகச்சிறந்த தீர்வாக அமைகிறது. அன்னாசி பழம் சாப்பிடுவதால் உங்களது பல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் தீரும். நீங்கள் உணவுக்கு முன் இது போன்று பச்சைக்காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட்டால் உங்களது பற்களின் ஆரோக்கியம் நீடிக்கும். மேலும் நீங்கள் தக்காளி பழத்தையும் சாப்பிடலாம்.

நீங்கள் கடுமையான பிரஸை உபயோகிக்க வேண்டாம். ஏனென்றால் கடுமையான பிரஸ்கள் உங்களது பற்களை எளிதில் சேதப்படுத்தும் தன்மை கொண்டவை… மேலும் பற்களை வேகவேகமாக அழுத்தி தேய்ப்பதும் கூடாது.

புதினா இலையை காய வைத்து சம அளவு உப்பு சேர்த்து தூளாக்கி காலை, மாலை பல் துலக்கி வந்தால் பல் கூச்சம் குறையும். பற்களும் ஆரோக்கியமாக இருக்கும்.

வேப்பில்லை ஒரு இயற்கையான ஆன்டி பயோடிக்காகும். இது கெட்ட பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. நமது ஊர் பகுதிகளில் சும்மாவே கிடைக்கும் இந்த வேப்பங்குச்சியின் பயன் நமக்கு தெரிவதில்லை.. ஆனால் மேலை நாடுகள் இதனை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றன. இந்த வேப்பங்குச்சியில் பல் துலக்கினால் பற்களில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து போகும்.

வெந்தயக்கீரை நமது வாயில் உண்டாகும் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. இந்த வெந்தயக்கீரையை ஒரு கப் தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து அந்த நீரில் வாய்க்கொப்பளித்தால், வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

அசோக மரப்பட்டையை தூளாக்கி அதனுடன் உப்பு சேர்த்து அந்த தூளைக் கொண்டு பல் துலக்கினால், பல் வலியை குறைக்கலாம். இது பல் வலிக்கு ஒரு மிகச்சிறந்த மருந்தாகும்.

ஆலமரப்பட்டை மிகுந்த மருத்துவ குணங்களை கொண்டது ஆகும். இது பல் வலிக்கு மிகச்சிறந்த தீர்வை அளிக்கிறது. ஆலமரப்பட்டையில் கசாயம் செய்து, அதை கொண்டு வாய் கொப்பளித்தால் வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

கொய்யா இலை வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்திற்கும் மிகச்சிறந்த அருமருந்தாகும். இந்த கொய்யா இலையை தூள் செய்து அதனுடன் உப்பு சேர்த்து கலந்து வைத்து, இந்த பொடியை கொண்டு பல் துலக்கினால் வாய் துற்நாற்றம், ஈறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.

எலுமிச்சையின் தோலை தூக்கி எறியாமல் அதனை நன்றாக வெயிலில் காய வைத்து தூள் செய்து அதனை கொண்டு பல் துலக்கினால் உங்களது பற்கள் பளிச்சென்று மின்னும்.

ஈறுகளில் இரத்தம் வடிதல் பிரச்சனைக்கு உப்பு ஒரு மிகச்சிறந்த மருந்தாகும். இது அனைத்து வகையான தொற்றுகளையும் நீக்க கூடியது. மேலும் உப்பு ஒரு மிகச்சிறந்த ஆன்டி செப்டிக் ஆகும். மேலும் இது பிரச்சனையை உண்டாக்கும் பாக்ட்டீரியாக்களையும், பற்களில் உள்ள வலியையும் போக்க கூடியது.

ஒரு டம்ளர் மிதமான சூடுள்ள நீரில் சிறிதளவு உப்பை போட்டு ஒரு நாளில் ஒரு சில முறைகள் வாய் கொப்பளித்தால், இந்த ஈறுகளில் இரத்தம் வடிதலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉடலில் இரத்தம் குறைவாக இருந்தால் தென்படும் அறிகுறிகள்!
Next article10 வருட ஏக்கத்திற்கு பிறகு கிடைத்த பொக்கிஷம்! மகிழ்ச்சியில் சீரியல் நடிகர் ப்ரஜின் வெளியிட்ட புகைப்படம்!