வவுனியாவில் திடீரெனப் பற்றியது காட்டுத்தீ – 10 ஏக்கர் காணி சேதம்

0
285

வவுனியா குருந்துபிட்டி பகுதியில் குடியிருப்புக்கு பின்பாகவுள்ள காட்டுப்பகுதி தீப்பற்றி எரிந்துள்ளது.

இன்று மதியம் 1 மணியளவில் தீ பிடித்ததுடன் காற்றின் வேகம் அதிகரித்ததால் எல்லா இடங்களுக்கும் தீ பரவியது.
இதனால் அந்தப் பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளித்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த இரட்டைபெரியகுளம் பொலிஸார், வவுனியா நகரசபை தீ அணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தீவிபத்தில் 10 ஏக்கர் அளவிலான காட்டுப்பகுதி தீயில் கருகின எனத் தெரிவிக்கப்பட்டது.

தீ பரவலுக்கான காரணம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: