இந்த இலை சாறை இரு வேளை குடித்துவர வயிற்றுப்போக்கு, நாள்பட்ட கழிச்சல் குணமாகும்..!

0
447

வயிற்று வலி, வயிற்றுப்போக்கை சரிசெய்ய கூடியதும், தோல்நோய்களை போக்கும் தன்மை கொண்டதும், புண்களை ஆற்றவல்லதுமான அவரையின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். உணவுக்கு பயன்படும் அவரை அற்புதமாக நார்ச்சத்து உடையது.

இது, பல்வேறு நோய்களை குணப்படுத்தும். இரும்பு சத்தை கொண்ட இது உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு அற்புதமான பயன் தருகிறது. உடலுக்கு பலம் தருகிறது. அவரை இலைகள் உள், வெளி மருந்தாக பயன்படுகிறது.

அவரை இலைகளை பயன்படுத்தி வயிற்று வலி, நாள்பட்ட கழிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அவரை இலை, பனங்கற்கண்டு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர்விடவும். இதனுடன், அரைத்து வைத்திருக்கும் அவரை இலை பசை, பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

இதை வடிகட்டி காலை, மாலை வேளைகளில் குடித்துவர வயிற்றுப்போக்கு, கழிச்சல் கட்டுக்குள் வரும். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட அவரை இலைகள் வீக்கத்தை வற்றச்செய்யும் தன்மை உடையது. பூஞ்சை காளான்கள், நுண்கிருமிகளை போக்கும். அவரை இலையை பயன்படுத்தி குளியலுக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

அவரை இலை, அரிசி மாவு, பச்சை பயறு மாவு, கஸ்தூரி மஞ்சள். செய்முறை: அரிசி மாவு, பச்சை பயறு மாவு, சிறிது கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றுடன் அவரை இலை பசை சேர்த்து நன்றாக கலந்து உடலில் பூசி சிறிது நேரம் கழித்து குளித்துவர தோல் பொலிவு பெறும்.

தோலின் மேல் பற்றியுள்ள கிருமிகள் விலகும். கருமையான திட்டுக்கள் சரியாகும். தோலில் ஏற்படும் அரிப்பு, தடிப்பு விலகும். அவரை இலையை பயன்படுத்தி புண்களுக்கான மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: அவரை இலை, விளக்கெண்ணெய், சுண்ணாம்பு.

செய்முறை:

அவரை இலை சாறு எடுக்கவும்.இதில், சிறிது விளக்கெண்ணெய் விடவும். இதனுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலந்து சிறுசிறு காயங்கள், புண்கள் மீது பூசிவர சீழ் பிடிக்காமல் புண்கள் ஆறும். கட்டிகள் பழுத்து உடையும்.பல்வேறு சத்துக்களை கொண்டுள்ள அவரை உடலுக்கு பலம் தரும். ஈறுகளில் இருந்து ரத்தம் கசிவதை தடுப்பது குறித்த எளிய மருத்துவத்தை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: நெல்லி வற்றல் சூரணம், வில்வ இலை சூரணம். வைட்டமின் சி சத்து குறைபாட் டால் ஈறுகளில் ரத்தம் வருகிறது. நெல்லி வற்றல் சூரணம், வில்வ இலை சூரணம் ஆகியவற்றை கலந்து ஒரு ஸ்பூன் அளவுக்கு காலை, மாலை வேளைகளில் சில நாட்கள் சாப்பிட்டுவர ரத்த கசிவு நிற்கும். பற்கள் உறுதி பெறும்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: