வன்முறை வெடித்தது! பிரான்ஸில் பிரதமர் எத்துவார் பிலிப்பின் ஓய்வூதிய திட்டதை எதிர்த்து மாபெரும் வேலை நிறுத்த போராட்டம்!
பிரான்ஸ்-ல் இரவில் ஓவூதியம் தொடர்பாக நடந்த போராட்டத்தில், வன்முறை வெடித்தது. பிரதமர் எத்துவார் பிலிப்பின் ஓய்வூதிய திட்டதை எதிர்த்து மாபெரும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகின்றது.
2019ஆம் ஆண்டு கோடை காலத்தின் போது ஓய்வூதிய அதிகாரி Jean Paul delevoy இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தை உருவாக்கினார். அதன்படி ஓய்வூதிய வயது வரம்பு 64ஆக உயர்த்தப்பட்டது. தவிர சேவைக்காலத்தை பொறுத்து ஓய்வூதியத்தின் தொகை மாறுபடும். 64வயத்திற்கு முன் ஓய்வூதியம் கோரினால் தொகை அளவு வேறுபடும் என்பன உள்ளிடவை உள்ளடங்கி இருந்தது.
முன்னதாக இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிபர் மேக்ரானின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட 60 சதவிகிதத்தினர் நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு செய்தனர். 33 சதவிகிதத்தினர் ஆதரவும், 7 சதவிகிதத்தினர் இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இதன் மூலம் ரயில் போக்குவரத்து, பேருந்து போக்குவரத்து, போன்றவை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று ரயில் போக்குவரத்து மட்டுமே இயங்கும் என்று போராட்ட ஒருங்கிணைப்பு அமைப்பு SNCF தெரிவித்துள்ளது. 70 சதவிகித போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அது அறிவித்துள்ளது. மேலும், நேற்று இரவு போராட்டகாரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களை பொலிசார் அடக்க முற்பட்டு இயலவில்லை. பின் கண்ணீர்புகை குண்டு, மற்றும் தண்ணீ பீச்சி அடித்து கலைத்தனர்.