வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவி! முகத்தில் பிளாஸ்டிக் பேக்! கை நரம்பு அறுக்கப்பட்டு மர்ம மரணம்!

0
487

தேர்வில் தோல்வியடையும் மாணவ மாணவிகள் தற்கொலை செய்து உயிரிழப்பது நாம் அதிகளவில் அவதானித்து வருகிறோம். ஆனால் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவி எப்படி தற்கொலை செய்து கொள்ள முடியும்.

கொல்கத்தாவில் பிரபல பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் தனது கை மணிக்கட்டை அறுத்துக்கொண்டு உயிரிழந்துள்ளார். அவரது முகம் பாலிதீன் கவரினால் மூடப்பட்டிருந்தது. மாணவியின் மரணம் கொலையா தற்கொலையா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

உயிரிழந்த அந்த மாணவி வகுப்பில் முதல் மதிப்பெண் எடுப்பவர். வகுப்பில் மதியம் சாப்பிட்டு விட்டு கை கழுவப் போன அந்த சிறுமி திரும்ப வரவில்லை. மாணவியின் தோழிகள் பாத்ரூமிற்கு சென்று பார்த்த போது அவர் உயிரிழந்திருந்தார். கையின் மணிக்கட்டில் இருந்து ரத்தம் வழிந்து உறைந்து போயிருந்தது. சிறுமியின் முகம் பாலிதீன் கைகளால் கட்டப்பட்டிருந்து.

மரணத்திற்கு காரணம் மன அழுத்தம்தான் என்று சிறுமியின் அருகே கிடந்த தற்கொலை கடிதம் கூறுகிறது. கடந்த மூன்று மாதங்களாகவே சரியான தூக்கமில்லை. மன அழுத்தமும் அதிகரிக்கிறது என்று எழுதியிருக்கிறார். சில நேரங்களில் மன அழுத்தம் கொலை செய்ய தூண்டுகிறது. கொல்கத்தாவில் பள்ளி மாணவியின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிகவும் புத்திசாலித்தனமான அந்த மாணவியின் மரணம் உடன் படிக்கும் மாணவிகளையும் பெற்றோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெற்றோர்களும் அதிர்ச்சியில் உள்ளதால் விசாரணை நடைபெறுவதில் சிக்கல் உள்ளது. கைரேகை தடயங்களைக் கொண்டும், சிசிடிவி கமெரா காட்சிகளைக் கொண்டும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பெயிலாகும் மாணவர்கள், தேர்வு சரியாக எழுதாத மாணவர்களுக்கு மட்டுமல்ல முதல்மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது. பெற்றோர்கள், தங்களின் பிள்ளைகளின் மனநிலையை உணர்ந்து அதற்கேற்ப உளவியல் தீரியான சிகிச்சை அளித்தால் தற்கொலைகளை தடுக்க முடியும் என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதாயின் கடைசி நொடி! கண்முன்னே நிகழ்ந்த கொடூரத்தால் துடிதுடித்த மகள்! பதபதைக்க வைக்கும் புகைப்படம்!
Next articleகடன் தொல்லையால் ஏலத்திற்கு வரும் பிரபல நடிகரின் வீடு! எத்தனை கோடி தெரியுமா! கடும் அதிர்ச்சியில் குடும்பத்தினர்!