ருத்ராட்சம் அணிவதால் கிடைக்கும் பலன்கள் என்ன? இந்த தவறை செய்யவே கூடாதாம்? ருத்ராட்சம் பெண்கள் அணியலாமா?

0
1029

சிவபெருமானின் முக்கண்களிலிருந்தும் தெறித்த ஆனந்தக் கண்ணீரின் சொட்டுகள் ருத்திராட்சமாகும். சிவனின் வலது கண்ணிலிருந்து மஞ்சள் நிற ருத்திராட்சங்கள் பன்னிரெண்டும், இடது கண்ணில் இருந்து பதினாறு வெண்ணிற ருத்திராட்சங்களும், நெற்றிக் கண்ணிலிருந்து கருப்பு நிறமுள்ள 10 ருத்திராட்சங்கள் என்று மொத்தம் 38 விதமான ருத்திராட்சங்கள் உள்ளது.

பெண்கள் ருத்ராட்சத்தை அணியலாமா?

ருத்திராட்சத்தை பெண்கள் மட்டுமல்ல சிறியவா்கள் முதல் பொியவா்கள் வரை அனைவரும் அணியலாம். ஆனால் இதனை அணிந்தவர்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். எனவே தீட்டு இடங்கள் அல்லது வீடுகளுக்கு செல்லக் கூடாது.

ஒருவேளை இது போன்ற தவறுகள் தெரியாமல் நடந்து விட்டால், அணிந்திருக்கும் ருத்ராட்சத்தை தூய்மை செய்து, அதன் பின் அணிந்துக் கொள்வது நன்மை தரும்.

பெண்கள் ருத்திராட்சம் அணிந்துக் கொள்ளலாம். ஆனால் இரவில் கழற்றி பூஜை அறையில் வைத்து விட்டு, காலை எழுந்து குளித்து விட்டு அணிந்துக் கொள்ள வேண்டும். மாதவிடாய் காலங்களில் உள்ள பெண்கள் கண்டிப்பாக ருத்திராட்சத்தை தொடவேக் கூடாது.

குழந்தைகளுக்கு ருத்ராட்சத்தை போட்டு விடுவதால், மன சலனங்களை நீக்கி சுவாசத்தை சுத்தப்படுத்துகின்றது,உடலின் நோய் எதிர்ப்பு மற்றும் ஜீரண சக்தியை அதிகரிப்பதுடன், கல்வியை சிறந்த முறையில் பயில்வதற்கு உதவுகிறது. உடலின் 7 சக்கரங்களை துாிதப்படுத்துகின்றது.

ருத்திராட்சம் அணிவது பற்றி கவனிக்க வேண்டியவை

ருத்திராட்சங்கள் ஒரு முகம் முதல் 16 முகம் வரை கொண்ட பதினாறு வகை உள்ளது. இதன் மேல் உள்ள கோட்டின் எண்ணிக்கையை வைத்து, அந்த ருத்திராட்சம் எத்தனை முகம் கொண்டது என்பதை அறிந்துக் கொள்ளலாம். சில குறிப்பிட்ட முகம் கொண்ட ருத்ராட்சங்களை இடது கையால் தொடவோ அல்லது எடுக்கவோ கூடாது. அதேபோல ஜெப ருத்ராட்ச மாலைகளை பிறர் தொடவும் அனுமதிக்கவோ அல்லது பிறருக்கு கொடுக்கவோ கூடாது.

செயற்கையாக கிடைக்கும் ருத்திராட்சம் அணிவதன் மூலம் எவ்வித பலனும் இல்லை. இயற்கை ருத்திராட்சம் செம்மையும் கருமையும் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும், இயற்கை பொருளான ருத்திராசம் மட்டுமே ஆன்மீகம், மருத்துவம் மற்றும் ஜோதிட பயன்களை கொடுக்கும்.

ஜெபம் செய்யும் ருத்ராட்ச மாலைகளை கழுத்தில் அணியக் கூடாது. கழுத்தில் அணியும் ருத்ராட்ச மாலையை ஜெபம் செய்ய பயன்படுத்தக் கூடாது.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: