யாழ்ப்பாணத்திலுள்ள நபருக்கு கிடைத்த பேரதிர்ஷ்டம்! சீட்டிழுப்பில் பல கோடி ரூபா பணப்பரிசு.

0
296

யாழ்ப்பாணத்திலுள்ள நபருக்கு கிடைத்த பேரதிர்ஷ்டம்! சீட்டிழுப்பில் பல கோடி ரூபா பணப்பரிசு.

யாழ்ப்பாணத்திலுள்ள ஒருவருக்கு கோடிக்கணக்கான ரூபா அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பின் மூலம் கிடைத்துள்ளதாக யாழ். ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த நபருக்கு 6 கோடி 11 லட்சம் ரூபா ஜாக்பொட் பரிசு கிடைத்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நடைபெற்ற சீட்டிழுப்பின் போது இந்த பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரியிலுள்ள தேசிய லொத்தர் சபையின் கிளையின் ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்ட அதிர்ஷ்ட லாபச் சீட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தென்மராட்சி பிரதேச செயலகத்துக்கு முன்பாக உள்ள அதிர்ஷ்ட லாபச் சீட்டுக்கள் விற்பனை முகவரிடம் விற்பனையான சீட்டுக்கு ஜாக்பொட் பரிசு கிடைத்துள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: