யாழில் இளைஞனை சுட்டுக் கொன்ற பொலிஸார் மக்களால் பதற்றம்

0

மல்லாகத்தில் சற்று முன்னர் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அங்குள்ள சகாய மாதா ஆலயப் பெருநாளில் கலந்துகொள்ளத் திரண்டிருந்த மக்கள் தற்போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர். அதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்ற நிலைமை தோன்றியுள்ளது.

யாழ்ப்பாணம், கே.கே.எஸ். வீதி ஊடான போக்குவரத்து சகாய மாதா ஆலயத்துடன் தடைப்பட்டுள்ளது. மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர்.

தெல்லிப்பழை, சுன்னாகம் பொலிஸார் பெரும் எண்ணிக்கையில் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இருகுழுக்கள் மோதலிலில் ஈடுபட்டதாலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்று பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதை மறுக்கும் பொதுமக்கள் பெருநாளில் பங்கேற்க வந்த இளைஞர்கள் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்று கூறுகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபிக்பாஸ் வீட்டில் ஷாரிக் நீச்சல் குளத்தில் செய்த வேலை- பிக்பாஸ்-2 இரண்டாம் நாள் அப்டேட்!
Next articleகருவில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா?கண்டறிய சில வழிகள்!